சேலம் மாவட்டம் முள்ளாகாடு பகுதியை சேர்ந்தவர் குணசீலன் [26]. இவருக்கு பசுபதி, கமல் என்ற இரு சகோதரர்கள் இருக்கின்றனர். இவரது தாய் சிறுவயதிலேயே காலமானதால், தந்தை மற்றொரு திருமணம் செய்துக்கொண்டார். இதனால், தனது சகோதரர்களுடன் பாட்டி வீட்டில் வசித்துவந்தார். குடும்ப சூழலுக்காக கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பனியன் கம்பெனியில் கூலிவேலை செய்துவந்தார். இவரது தம்பி பசுபது மதுரையில் ஒரு தனியார் ஹோட்டலில் சமையலராக வேலை செய்துவருகிறார்.
இந்தநிலையில் தான், குணசீலன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளார். ஆரம்பத்தில் தனது சம்பள பணத்தை இழந்த குணசீலன், சில நாட்களுக்குப்பிறகு நண்பர்களிடம் கடன்வாங்கி சுமார் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதை தெரிந்த தம்பி பசுபதி அந்த கடனை அடைத்து, குணசீலனை மதுரையிலேயே மற்றொரு ஹோட்டலில் சர்வர் வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனாலும், ஆன்லைன் ரம்மி மோகத்திலிருந்து வெளிவராத குணசீலன் மீண்டும் தொடங்கியுள்ளார். மீண்டும் தனது சம்பள பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். மறுபடியும் பணத்தை இழந்த குணசீலன் சில நாட்களாகவே மனஉளைச்சலில் இருந்துவந்துள்ளார். இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் ஹோட்டலுக்கு வேலைக்கு வந்த குணசீலன் மதியம் 3 மணிக்கு மேல் காணவில்லை.
இதனால், பதறிப்போன பசுபதி சாத்தமங்கலத்தில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, கொக்கியில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து, அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதன்பிறகு, குணசீலனுடைய அலைபேசியை கைப்பற்றிய ஆய்வுக்கு அனுப்பினர். விசாரணையில் குணசீலன் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயை ஆன்லைன் ரம்மியில் இழந்திருப்பது தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…