Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

பாசிடிவ் ரிவியூக்கு ரூ.3 லட்சம் - பிரபல விமர்சகரின் வண்டவாளத்தை போட்டுடைத்த பார்த்திபன்!

Udhaya Kumar July 21, 2022 & 12:39 [IST]
பாசிடிவ் ரிவியூக்கு ரூ.3 லட்சம் - பிரபல விமர்சகரின் வண்டவாளத்தை போட்டுடைத்த பார்த்திபன்!Representative Image.

நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் மிக நல்ல விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனை அனைத்து விமர்சகர்களும் வரவேற்று தங்களது விமர்சனத்தில் நல்ல ரிவீயூக்களைக் கொடுத்துள்ளனர். ஆனால் ப்ளூ சட்டை மாறன் மட்டும் வழக்கம்போல முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டார். 

இயக்குநர், நடிகர் பார்த்திபன் தனது படத்தை மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருப்பதாகவும், அதை ஆதரித்தால் என்னைப் போன்ற பலர் புது முயற்சிகளை மேற்கொள்வார்கள் எனவும் கூறியிருந்தார். அதற்கு மாறன், படம் நல்லா இருந்தா பார்க்கப்போறோம் எதற்காக கஷ்டப்பட்டு மெனக்கெட்டு படம் எடுத்திருக்கோம்னு சொல்லி படத்தை வியாபாரம் செய்யணும்னு கேட்க, இருவருக்கும் முட்டிக்கொண்டது. இது மட்டுமின்றி இது முதல் முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் கிடையாது எனவும் அவர் தெரிவித்திருந்தார். 

இப்படிப்பட்ட சூழலில் பார்த்திபனுக்கு வேண்டியவர்கள் மாறன் உருவ பொம்மை எரிப்பில் ஈடுபட்டதாக தகவல் பரவியது. அதை கண்டித்து பேசிய பார்த்திபன், இவ்வாறு செய்தது தவறு என கூறியிருந்தாராம். அப்போதுதான் விசயம் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட தயாரிப்பாளரும் பார்த்திபனின் நண்பருமாகிய அந்த நபர், ஏற்கனவே படம் வெளியிடும்போது அதனைப் பற்றி பாசிடிவ் ரிவீயூ கொடுக்க 3 லட்சம் ரூபாய் தர வேண்டும் என நிர்பந்தித்தாராம். 

ப்ளூ சட்டை மாறன் இருக்கும் படங்களை எல்லாம் மட்டம் தட்டிவிட்டு, பாசிடிவ் ரிவியூ கொடுக்க காசு கேட்கிறார் என்கிற செய்தி இப்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதனை நிச்சயமாக மறுத்து பதிலளிப்பார் மாறன் என்பது தெரிந்த விசயம்தான் என்றாலும் பல நடிகர்களின் ரசிகர்கள் அவர் மேல் கொலை காண்டில் இருக்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்