Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

மயில்சாமி, மனோ பாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..

Nandhinipriya Ganeshan Updated:
மயில்சாமி, மனோ பாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..Representative Image.

2007 ஆம் ஆண்டு கார்த்தி நடித்து வெளியான 'பருத்திவீரன்' திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் செவ்வாழை ராசு. விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான ராசு, திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய பிறகு செவ்வாழை ராசு என அழைக்கப்பட்டார். 

இயக்குநர் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். எம்ஜிஆரின் தீவிர ரசிகரான செவ்வாழை ராசு, அரசியலில் சாதிக்கவும் முயற்சி செய்தார். பின்னர் திரைத்துறையில் தடம் பதித்தார். கந்தசாமி, மைனா உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்திருக்கிறார். 

மயில்சாமி, மனோ பாலாவை தொடர்ந்து மற்றொரு காமெடி நடிகர் மரணம்.. ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..Representative Image

இந்தநிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 70. சமீபத்தில் நடிகர் மனோ பாலா மரணமடைந்தார். இந்த துயரத்தில் இருந்து வெளி வருவதற்குள் இன்னொரு துயரம் சம்பவம் நடந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்