தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இன்று வரை ஸ்டாராக மின்னிக் கொண்டிருக்கும் ஒரு சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர். சிம்பு சமீபத்தில் நடித்த இரண்டு படங்களும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து, இப்போது அவருக்கு திருமணம் குறித்த தகவல் வெளியில் பரவி வருகிறது.
திருமண வயதைக் கடந்தும் சில நடிகர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களின் ரசிகர்களே அந்த நடிகர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகவேண்டும் என வேண்டி கேட்டு வருகின்றனர். சிம்புவுக்கு திருமணம் செய்து பார்க்கவேண்டும் என அவரது தாய், தந்தை எவ்வளவோ முயற்சித்தும் சிம்பு பிடி கொடுக்காமல் உள்ளார்.
இந்நிலையில், சிம்பு திருமணம் குறித்து ராஜேந்தர் பேசியுள்ளார்.
என் மகனுக்கு பிடித்த பெண்ணை நான் தேர்ந்தெடுப்பதை விட, என் மனைவி உஷா ராணி தேர்ந்தெடுப்பதை விட என் மகனுக்கு பிடித்த மணமகளை, அந்த குலமகளை, அந்த கலைமகளை, என் இல்லத்திற்கு ஏற்ற திருமகளை இறைவன் தான் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.என்னை யார் பார்த்தாலும் உங்கள் மகனுக்கு எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள். இறைவன் அருளால் நடக்க வேண்டும். தமிழக ரசிகர்களின் அன்பால் திருமணம் நடக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…