தமிழ் திரை உலகத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு சங்கீதா என்பவர் உடன் திருமணமாகி பல வருடங்களாக அமைதியான வாழ்க்கை தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் தற்போது நடிகர் விஜய்க்கு விவாகரத்து ஆகிவிட்டது என்ற செய்தி பெரும்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தன் ரசிகையான சங்கீதா சொர்ணலிங்கத்தை திருமணம் செய்து கொண்டார். 1999 இல் சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட விஜய் தன் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய், திவ்யா என இரண்டு குழந்தைகள் உண்டு.
கோலிவுட்டில் கொண்டாடப்படும் ஜோடிகளில் விஜய் சங்கீதா ஜோடியும் ஒன்று. திடீரென நடிகர் விஜய் உடைய விக்கிப்பீடியா பக்கத்தில் இவர் மியூச்சுவல் விவாகரத்து பெற்றதாக பதிவிடப்பட்டு இருந்தது.மேலும் இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாகவும் பதிவிடப்பட்டு இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இதுகுறித்த செய்தி காட்டுத்தீ போல பரவ மீண்டும் விஜயின் விக்கிப்பீடியா பக்கத்தில் திருத்தம் செய்யப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…