அரவிந்த் சாமி, மதுபாலா நடிப்பில் மணிரத்னம் இயக்கிய படம் ரோஜா. இந்த படத்தில் காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் காட்சிகள் கலந்து சூப்பரான திரைக்கதையை கொண்டு படத்தை மிக நேர்த்தியாக எடுத்திருப்பார் மணிரத்னம். இந்த படத்துக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு. அந்த அளவுக்கு படத்தின் கதை பெரும்பாலானவர்களை ஈர்த்தது. இந்த படத்தில்தான் ஏ ஆர் ரஹ்மானின் இசை நாடெங்கும் பரவியது.
இந்தியா முழுக்க ஏ ஆர் ரஹ்மான் அறியப்பட்டார். இந்த படத்தின் பாடல்களுக்கு இப்போதும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த படத்தில் நாயகியாக நடிக்க லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவைத் தான் முதலில் கேட்டிருக்கிறார் மணிரத்னம். அந்த சமயத்தில் ஐஸ்வர்யா தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தாராம். இதனால் ஐஸ்வர்யாவின் பாட்டி இந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா நடிப்பதாக இருந்த தெலுங்கு படமும் டிராப் ஆகிவிட்டது. ரோஜா படம் ரிலீஸாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டாக, தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமையை நினைத்து நினைத்து சில மாதங்களாக தூங்காமல் தவித்தாராம் ஐஸ்வர்யா. தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்டேன் என அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…