Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பம்.. பிரபல நடிகை அறிவிப்பு!!

Sekar Updated:
திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பம்.. பிரபல நடிகை அறிவிப்பு!!Representative Image.

திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமடைந்துள்ளதாக பிரபல நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு மஞ்சு போலொரு பெண்குட்டி படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமான நடிகை பூர்ணா, பின்னர் தெலுங்கு மற்றும் தமிழ் மற்றும் கன்னட சினிமாக்களிலும் நடித்தார்.

தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும், பெயர் வாங்கி கொடுக்கும் அளவுக்கு எந்த படமும் அமையவில்லை. கடைசியாக தமிழில் பிசாசு 2 படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, கேரளாவை பின்புலமாக கொண்ட துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஷனித் ஆசிஃப் என்பவரை திருமணம் செய்து துபாயில் செட்டிலாகிவிட்டார்.

இந்நிலையில், திருமணமான இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்