Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று!

Kanimozhi Updated:
சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று! Representative Image.

80களில் தனது காந்த கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட சில்க் ஸ்மிதா பிறந்த தினம் இன்று. கவர்ச்சி நடிகையாக களமிறங்கி இருந்தாலும் 80,90களில் மாஸ் ஹீரோக்களாக வலம் வந்த ரஜினி, கமல், சத்யராஜ், விஜயகாந்த் ஆகியோருக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தவர், இன்று வரையிலும் நம்மை நினைக்க வைப்பவர் சில்க் ஸ்மிதா. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் சரி, சுப்ரீம் ஸ்டாராக இருந்தாலும் சரி சில்க் ஸ்மிதா ஒத்த குத்து பாட்டிற்காக ஓடிய படங்கள் ஏராளம். 1960ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ஆந்திர மாநிலம் ஏலூரு கிராமத்தில் பிறந்த சில்க் ஸ்மிதாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இளம் வயதிலேயே திருமணமாகி, மண வாழ்க்கையில் ஏமாற்றத்தை சந்தித்த விஜயலட்சுமி, பிழைக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தார். 

திரைப்படங்களில் வாய்ப்புத் தேடி அழைந்து கொண்டிருந்தார் விஜயலட்சுமி. கடைசியில் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். அவரை ஸ்மிதா என்ற பெயரில் வினுசக்கரவர்த்தி தான் அறிமுகப்படுத்தி வைத்தார். வண்டிச்சக்கரம் படத்தில் தனது வசீகர கண்கள் மற்றும் பட்டுபோன்ற மேனி அழகால் கவர்ந்த ஸ்மிதாவிற்கு, செல்லமாக சில்க் என்ற பட்டத்தையே ரசிகர்கள் சூட்டினர். இதனால் சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 17 வருடங்களில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

புகழின் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா சொந்த வாழ்க்கையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளானவர், 1996இல், ஸ்மிதா சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மண்ணை விட்டு மறைந்தாலும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் வாழ்த்து வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்