Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,966.02
64.11sensex(0.10%)
நிஃப்டி20,110.95
14.35sensex(0.07%)
USD
81.57
Exclusive

ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1

Aruvi Updated:
ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1Representative Image.

சென்னை: ஆதிபுருஷ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்திய அளவில் பிரபலமான நடிகராக விளங்கும் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஓம் ராவத் இயக்கியிருக்கும் படத்தில் சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு பெரும்பாலான ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது.
 

ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1Representative Image

சொதப்பிய கிராஃபிக்ஸ்

படத்திலிருந்து முதல் டீசர் வெளியானபோது ரசிகர்கள் அதை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக படத்தின் க்ராஃபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக இல்லை என கூறியதை அடுத்து கிராஃபிக்ஸை மெருகேற்றும் பணியில் இறங்கியது படக்குழு. இதன் காரணமாக ஜனவரியில் வெளியாக வேண்டிய படம் தள்ளிப்போனது. கிராஃபிக்ஸுக்கான வேலையை முடித்த பிறகு இரண்டு ட்ரெய்லர்கள் வெளியிடப்பட்டன. இரண்டு ட்ரெய்லர்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.
 

ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1Representative Image

அனுமனுக்கு சீட்

இப்படிப்பட்ட சூழலில் ஆதிபுருஷ் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்கு ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்தது. ஏற்கனவே கிராஃபிக்ஸ் காட்சிகளை கழுவி ஊற்றிக்கொண்டிருந்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் படக்குழுவின் இந்த அறிவிப்பையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இருந்தாலும் எடுத்த முடிவில் ஆதிபுருஷ் படக்குழு உறுதியாக நின்றது.

 

ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1Representative Image

படம் ரிலீஸ்

படக்குழு அறிவித்தபடி படமானது நேற்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸாகியிருக்கிறது. முதல் நாளில் படம் பார்த்தவர்கள் படத்துக்கு கலவையான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். மேலும் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் படு திராபையாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஆதிபுருஷ் முதல் நாள் கலெக்ஷன்.. நிலைமை ரொம்ப பரிதாபமா இருக்கே..! | Adipurush Collection Day 1Representative Image

முதல் நாள் கலெக்‌ஷன்

இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நூறு கோடி ரூபாய்க்கும் மேல் பட்ஜெட்டில் உருவான படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 60 கோடி ரூபாய்வரைதான் கலெக்ஷன் செய்திருக்கிறதாம். உலகம் முழுவதும் மொத்தம் 4000 ஸ்க்ரீன்களில் படம் வெளியானதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலில் டல்லடித்திருப்பதால் படக்குழு பெரும் அப்செட்டில் இருக்கிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்