Sat ,Jun 22, 2024

சென்செக்ஸ் 77,209.90
-269.03sensex(-0.35%)
நிஃப்டி23,501.10
-65.90sensex(-0.28%)
USD
81.57
Exclusive

இந்து மதத்தை இழிவுபடுத்திய ஆதிபுருஷ்.. ஹீரோ பிரபாஸுக்கு வக்கீல் நோட்டீஸ்!!

Sekar October 13, 2022 & 11:47 [IST]
இந்து மதத்தை இழிவுபடுத்திய ஆதிபுருஷ்.. ஹீரோ பிரபாஸுக்கு வக்கீல் நோட்டீஸ்!!Representative Image.

ராமாயண காவியத்தை படமாக எடுத்து சமீபத்தில் டீசர் வெளியிடப்பட்ட ஆதிபுருஷ் படத்தில் பணியாற்றிய பிரபாஸ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு, இந்து மதத்தை அவமதித்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ஆதி புருஷ் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக 2023 பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்து புராண காவியமான ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதை வேடத்தில் கிரீத்தி சனோன், ராவணன் வேடத்தில் சையப் அலிகான் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் கிராபிக்ஸ் மிகவும் மட்டமாக இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக அனுமானை கார்ட்டூன் படத்தில் கூட இவ்வளவு மோசமாக காட்ட மாட்டார்கள் என எதிர்ப்புகள் எழும்பின.

இதற்கிடையே, இந்த படம் இந்து மதத்துக்கு எதிராகவும் இந்துக்களை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அயோத்தி ராமர் கோயில் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கண்டனம் தெரிவித்தார். மேலும் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். 

இந்நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், இயக்குனர் ஓம் ராவத் மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை டெல்லி ஐகோர்ட் அனுப்பியதாக முன்பு கூறப்பட்ட நிலையில்,, இதை தேசிய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பு அனுப்பியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இந்துக்களை புண்படுத்தும் வகையில் இந்த படம் இருப்பதாகவும், எனவே இதை கைவிட வேண்டும் என்றும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்