Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி - மீண்டும் உறுதி செய்த படக்குழு...!

UDHAYA KUMAR Updated:
ஆதிபுருஷ் ரிலீஸ் தேதி - மீண்டும் உறுதி செய்த படக்குழு...!Representative Image.

பிரபாஸ் ராமராகவும் சைஃப் அலிகான் ராவணனாகவும் நடிக்கும் படம் ஆதி புருஷ். இதில் சீதையாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்துள்ளார். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 12 என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்குதான் டிவிஸ்ட். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியானது. மிகவும் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகிய இந்த படத்தின் டீசரை அனைவரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். நிச்சயம் மிகப் பெரிய  வரவேற்பை பெறும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் படக்குழுவுக்கும் பயங்கர ஷாக். 

மிகவும் மோசமான கார்ட்டூன் பொம்மை பார்ப்பதற்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியிருந்தனர். இதனால் அதிக அளவு ட்ரோல்களை சுமந்தது இந்த படத்தின் டீசர். இதனால் மிகவும் மன அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார் பிரபாஸ். இப்படி பல தரப்பிலிருந்தும் கிண்டலும் கேலியும் வந்த பிறகு படக்குழு சுதாரித்துக் கொண்டு பட வெளியீட்டை மாற்றி வைத்தது. 

சில காட்சிகள் நீக்கப்பட்டு அவற்றிற்கு பதில் புதிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அவை கிராபிக்ஸில் சிறப்பாக வரும்படி கொண்டு வரப்பட்டன. 3டி முறையில் கிராபிக்ஸ் என்பதால் கூடுதல் நேரம் பிடிக்கும் எனவும் கூறப்பட்டது. இதனால் படத்தை ஜூன் மாதம் 16ம் தேதி வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் படம் வெளியாக இன்னும் 150 நாட்களே பாக்கி இருப்பதாக படத்தின் இயக்குநரே தெரிவித்துள்ளார். இதன்மூலம் படம் கண்டிப்பாக ஜூன் 16ம் தேதி வெளியாகிவிடும் என ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்