ஹெச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வரும் நிலையில், அஜித்குமார் நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல்களும் வெளியில் வரத் துவங்கியுள்ளன. ஷூட்டிங் எங்கே நடக்கப் போகிறது, எப்போது துவங்கவிருக்கிறது, அஜித்துக்கு வில்லனாக யார் நடிக்க இருக்கிறார்கள் என பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இவை அனைத்தும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வரும் தகவல்கள்.
ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் துவங்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடிக்க இருப்பதாகவும், தனுஷ் அல்லது விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. மேலும் இயக்குநர் கவுதம் வாசுதேவ் இந்த படத்தில் வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
அஜித் பட வாய்ப்பு கிடைத்தது குறித்து விக்னேஷ் சிவன் மனம் திறந்து பல விசயங்கள் பேசியிருக்கிறார். இவரது கதையை அஜித்திடம் சொல்லி ஓகே வாங்குவதற்குள் பெரிய போராட்டமே நடந்திருக்கும் போலிருக்கிறது. தன்னுடைய வித்தியாசமான திரைக்கதையில் அஜித்தை பொருத்தி பார்த்து எப்படி படத்தை எடுக்கப்போகிறார் என்பதே சந்தேகமாக இருக்கிறது. ஆனால் வாலி மாதிரியான படத்தில் நடித்தவர் அஜித், அவரை அதன்பிறகு வித்தியாசமான கதைகளில் பார்க்க முடியவில்லை என்கிற ஏக்கம் ரசிகர்கள் பலருக்கும் இருக்கிறது.
எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வாலி மாதிரியான ஒரு படத்தில் நடித்த அஜித், இப்போது மிக வித்தியாசமானதாக ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். வழக்கமான டெம்ப்ளேட் படமாக இது இருக்காது எனவும், நடைமுறையிலிருந்து மாறுபட்ட ஒரு கதையாக இது இருக்கும் எனவும் பேசப்பட்டு வருகிறது. அஜித்தை வைத்து எக்ஸ்பெரிமெண்ட் செய்கிறாரா விக்னேஷ் சிவன் என பலரும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…