Thu ,Nov 30, 2023

சென்செக்ஸ் 66,771.36
-130.55sensex(-0.20%)
நிஃப்டி20,069.35
-27.25sensex(-0.14%)
USD
81.57
Exclusive

அந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பளித்த அஜித்... எல்லாம் அந்த கதைதான்!

UDHAYA KUMAR Updated:
அந்த நடிகருக்கு மீண்டும் வாய்ப்பளித்த அஜித்... எல்லாம் அந்த கதைதான்!Representative Image.

தன்னுடன் துணிவு படத்தில் நடித்த ஒருவருக்கு வாழ்நாள் முழுக்க நினைத்து நன்றி செலுத்தும் விதமாக ஒரு உதவியைச் செய்துள்ளார் அஜித்குமார். அவர் வேறு யாருமில்லை. நம்ம பாவ்னியின் காதலர் அமீர்தான். 

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான அமீர், அவரது காதலர் பாவ்னியுடன் சேர்ந்து பல்வேறு இடங்களில் காதல் செய்துவந்தார். அப்படித்தான் மீடியாக்களில் தகவல்கள் பரவியது. ஆனால் உண்மையில் இவர்கள் தங்களுக்கான வாய்ப்பைத் தேடி அலைந்திருக்கிறார்கள் என்பது துணிவு படத்தின் மூலம்தான் உறுதியாகியுள்ளது. 

துணிவு படத்தில் அமீர் - பாவ்னி இருவரும் சேர்ந்தே நடித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த படத்திலும் அமீருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் அஜித். சிபாரிசு செய்து அத்தனை பாடல்களுக்கும் நடனம் அமைக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். 

லைகா நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்படவுள்ள திரைப்படம் அஜித்குமார் 62. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.  அனிருத் இசை அமைக்கிறார். அமீர் நடனத்தில் இரண்டு, மூன்று பாடல்கள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்