Thu ,Feb 09, 2023

சென்செக்ஸ் 60,663.79
377.75sensex(0.63%)
நிஃப்டி17,871.70
150.20sensex(0.85%)
USD
81.57
Exclusive

இது துணிவு பொங்கல் மட்டுமல்ல.. ரசிகர்களுக்கு செம அப்டேட்.. ஏகே62 உரிமையை கைப்பற்றியது நெட்ப்ளிக்ஸ்!!

Sekar Updated:
இது துணிவு பொங்கல் மட்டுமல்ல.. ரசிகர்களுக்கு செம அப்டேட்.. ஏகே62 உரிமையை கைப்பற்றியது நெட்ப்ளிக்ஸ்!!Representative Image.

நடிகர் அஜித் குமார் துணிவு படத்திற்கு பிறகு நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்னரேயே படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி பிளாட்பார்ம் கைப்பற்றியுள்ளது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பட்டையைக் கிளப்பி வருகிறது துணிவு. முழுக்க முழுக்க ஆக்சன் படமாக தயாராகியுள்ள இந்த படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால், உலகம் முழுவதும் தற்போதுவரை ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக்குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், துணிவுக்கு பிறகு அஜித்குமார் ஏகே62 (AK62) என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நிலையில், படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் ஏகே62 படத்தின் புதிய அப்டேட்டாக, நெட்பிளிக்ஸ் நிறுவனம் படத்தின் தியேட்டருக்கு பிந்தைய டிஜிட்டல் உரிமையை அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இது குறித்து நெட்ப்ளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில் படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிக்கான டிஜிட்டல் உரிமையை நெட்ப்ளிக்ஸ் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில், இதன்மூலம் ஏகே 62 பான் இந்தியா படமாக தயாராக உள்ள தகவலும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பும், "சில்லா சில்லா தான் எங்களால் வாங்க முடியாமல் போய்விட்டது. ஆனால், ஏகே62 (AK62) தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நெட்பிளிக்ஸில் திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு வெளியாகும்." என்று குறிப்பிட்டுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்