Fri ,Mar 24, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

500 கோடி பட்ஜெட்டில் மீண்டும் ராமாயணம்.. 'புஷ்பா' ஹீரோ அல்லு அர்ஜுன் உறுதி!!

Sekar October 23, 2022 & 12:56 [IST]
500 கோடி பட்ஜெட்டில் மீண்டும் ராமாயணம்.. 'புஷ்பா' ஹீரோ அல்லு அர்ஜுன் உறுதி!!Representative Image.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தனது கனவு படமான ராமாயணத்தை நிச்சயம் எடுத்தே தீருவேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாகுபலியின் வரவுக்கு பிறகு இந்திய சினிமாவில் பிரமாண்டமாக புராண மற்றும் வரலாற்று கதைகளை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. பாகுபலியை இயக்கிய ராஜமௌலி தனது கனவுப் படமாக மகாபாரதத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், நடிகர் அல்லு அர்ஜுனும் தனது கணவுப் படமாக இராமாயண காவியத்தை சில வருடங்களுக்கு முன் அறிவித்து, 500 கோடியில் படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது பல்வேறு காரணங்களால் தள்ளிப்போனது.

இதற்கிடையே ராமாயணத்தை தழுவி ஆதிபுருஷ் என்ற படம் தயாராகி, வரும் 2023 பொங்கலுக்கு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதில் பாகுபலியில் நடித்த பிரபாஸ் ராமராக நடிக்கிறார். ராவணனாக இந்தி நடிகர் சயீப் அலி கான் நடிக்கிறார். சீதையாக இந்தி நடிகை க்ரித்தி சனொன் நடிக்கிறார்.

பிரபாஸ் நடிப்பில் இராமாயண காவியத்தை தழுவி படம் எடுக்கப்பட்டுவிட்டதால், அல்லு அர்ஜுன் தனது திட்டத்தை கைவிட்டுவிடுவாரா என்று கேள்வி எழுந்த நிலையில், தான் கட்டாயம் அதை எடுத்தே தீருவேன் என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

மேலும், படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகக் கூறிய அவர், இன்னும் 6 மாதத்தில் ஷூட்டிங் கிளம்பி விடுவோம் என தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்