தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முன்னணியாக திகழும் சன் டிவியில் 'அனாமிகா' என்ற ஒரு புத்தம் புதிய தொடர் வெளியாகவுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகும் த்ரில்லர் சீரியல் என்பதால் அனாமிகா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் டிவி சேனல்களில் சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மேலும், டிஆர்பி ரேட்டிங்கிலும் முக்கிய இடம் பிடித்து வருகிறது. தற்போது பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சீரியல் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது அடுத்த புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கம்.
அதன் படி, சன் டிவியின் அன்பே வா சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது அனாமிகா என்ற புதிய சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த புதிய தொடரின் மூலம் நடிகை அக்ஷதா தேஷ்பாண்டே மீண்டும் சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கிறார். ஏற்கனவே சுந்தரி, எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், புது தொடரான அனாமிகா மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், சன்டிவியில் சில வருடங்களுக்கு ஒளிபரப்பாகும் இன்னொரு த்ரில்லர் சீரியல் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த சீரியலில் தர்ஷக் கவுடா மற்றும் அக்ஷதா தேஷ்பாண்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த சீரியல் எப்போது வெளியாகும், இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீரியல் குறித்த ப்ரோமா வைரலாகி வருகிறது.
அனாமிகா சீரியல் கதாபாத்திரம்:
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…