மலையாள திரையுலகில் 2013ம் ஆண்டு முதல் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. சூர்யாவின் “சூரரைப் போற்று” திரைப்படம் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றுள்ள இவர், தற்போது தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
மலையாளத்தில் நடிகர் வினித் ஸ்ரீனிவாசனும் இணைந்து அபர்ணா பாலமுரளி நடித்துள்ள ‘தங்கம்’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவனந்தாபுரம், எர்ணாகுளம் ஆகிய இடங்களில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று ஏர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அபர்ணா பாலமுரளி பங்கேற்றார். அப்போது விழா மேடை மீது திடீரென ஏறிய மாணவன் ஒருவன், அபர்ணா பாலமுரளியின் தோள் மீது கைபோட்டு புகைப்படம் எடுக்க முயன்றார். ஆனால் அவரது கையை விலக்கி விட்ட அபர்ணா, அவரது பிடியில் இருந்து விலகி நின்றார். அந்த மாணவன் மன்னிப்புக்கோரி கைகொடுக்க வந்ததையும் அபர்ணா மறுத்துவிட்டார்.
விழா மேடையில் பிரபல நடிகையிடம் மாணவர் ஒருவன் இப்படி அத்துமீறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
തോളില് കൈയ്യിടാന് ശ്രമം; അപര്ണ ബാലമുരളിയോട് മോശമായി പെരുമാറി വിദ്യാര്ഥി#AparnaBalamurali #vineethSreenivasan #Lawcollege pic.twitter.com/1EHgSioHXf
— OneIndia Malayalam (@thatsMalayalam) January 18, 2023
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…