Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கும்.. | D50 Update

Nandhinipriya Ganeshan Updated:
தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கும்.. | D50 UpdateRepresentative Image.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், ஜான் கோக்கன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், மூர் உள்ளிட்டோர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்து பிரபலமான அமெரிக்க நடிகர் எட்வர்ட் சோனென்ப்ளிக்கும் இணைந்துள்ளார். 1940 களின் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தனுஷுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.. கெமிஸ்ட்ரி பக்காவா இருக்கும்.. | D50 UpdateRepresentative Image

படத்தின் பெரும்பாலான காட்சிகள் தென்காசியில் உள்ள வனப்பகுதி மற்றும் அங்குள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. அது ஒருபக்கம் இருக்க, சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. 

இந்த படத்தை தனுஷ் இயக்கவுள்ளதாகவும், விஷ்ணு விஷால், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் பேசப்பட்டது. இந்நிலையில், தனுஷின் 50-வது படத்தில் இணையவுள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக 8 தோட்டாக்கள், சூரரைப் போற்று படங்களில் நடித்த பிரபலமான அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்