செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் ஒரு சைக்கோ என்றும், அதனால் தான் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் அர்னவ் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சன் டிவியின் பிரபல சீரியல்களின் ஒன்றாக இருந்த கேளடி கண்மணி மூலம் தான் திவ்யா ஸ்ரீதர் மற்றும் அர்னவ் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாற பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சமீபத்தில் தான் திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அர்னவை திருமணம் செய்துகொண்டதாகவும் சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்தார். இருவரின் வாழ்க்கையும் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில் தற்போது திவ்யா திடீர் பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னந்தனியாக சென்று அட்மிட் ஆன திவ்யா தனது கருவை கலைக்க அர்னவ் முயற்சிப்பதாகவும், தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் புகார் கொடுத்தார்.
பதிலுக்கு, மூன்று மாத கருவை கலைப்பதற்காக திவ்யா ஸ்ரீதர் தான் நாடகமாடுவதாகவும், தான் அடித்து துன்புறுத்தவில்லை என்றும் அர்னவ் குற்றம் சாட்டினார். மேலும் திவ்யா ஸ்ரீதருக்கு எதிரான பல ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.
திவ்யா தான் என்பதற்கான ஆதாரமாக காயங்களுடன் இருக்கும் புகைப்படங்கள், திவ்யா ஸ்ரீதர் தனது தாலியை கழட்டி வைத்துவிட்டு அர்னவ் தனக்கு வேண்டாம் என கைப்பட எழுதிய கடிதம், திவ்யாவிற்கு சைக்காட்ரிக் ட்ரீட்மெண்ட் எடுத்ததற்கான ஆதாரம் என பலவற்றை அதில் வெளியிட்டுள்ளார்.
மேலும் திவ்யா ஸ்ரீதர் ஒரு சைக்கோ என்றும் அதனால்தான் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…