அட்லீ படத்தின் தலைப்பு குறித்தும் அதில் ஹீரோ இரட்டை வேடத்தில் நடிப்பது குறித்து தகவல் பரவியுள்ள நிலையில், ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். அட்லீயின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முக்கியமாக விஜய் ரசிகர்கள் அட்லீயின் படத்தை காண ஆவலாக காத்திருக்கின்றனர். விரைவில் தளபதியுடன் சேர்ந்து படம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தும் வருகின்றனர்.
அட்லீ தற்போது ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி, சன்யா மல்கோத்ரா உள்ளிட்டோருடன் ஹிந்தி படத்தை இயக்கிவருகிறார். நயன்தாரா இந்த படத்தின் மூலம் ஹிந்தி சினிமா உலகில் அடியெடுத்து வைக்கிறார். படப்பிடிப்பு மிக வேகமாக நடைபெற்று கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் படம் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவரும் என தெரிகிறது. இதில் முதல் அப்டேட்டாக இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றிருந்த நிலையில், இது லீக் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Atlee shah rukh khan movie name | கடந்த 2018ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் ஜீரோ திரைப்படம் வெளியானது. அதன் பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாததால் அவரது ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அட்லீயும் கடைசியாக 2019ம் ஆண்டு பிகிலுடன் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. ஷாருக்கானே அழைத்ததால் இந்த படத்தை மிகவும் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் அட்லீ.
முதலில் இந்த படத்துக்கு லயன் எனும் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்போது அந்த படத்தின் தலைப்பு ஜவான் எனக் கூறப்பட்டு வருகிறது. படத்தின் டீஸர் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், மிக விரைவில் டீஸர் வெளியாகும் எனவும் தகவல் வந்துள்ளது. அடுத்தடுத்து இசை வெளியீடு, டிரெய்லர், பட ரிலீஸ் என முடித்துக் கொண்டு மீண்டும் சென்னை வரவுள்ளார் அட்லீ. வந்தவுடன் விஜய்யை சந்தித்து எப்ப ஷூட்டிங் போகலாம் என கேட்டு, தனது பயணத்தை விட்ட இடத்திலிருந்தே தொடருவார் என தெரிகிறது.
ஷாருக்கான் படத்துக்கு பிறகு அட்லீ தேசிய அளவில் மிகப் பிரபலமாகிவிடுவார் எனவும் அவர் கேஜிஎப் போன்ற பிரம்மாண்ட படங்களை எடுப்பார் எனவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
KEYWORDS:
atlee shah rukh khan movie name,
srk atlee movie update,
srk atlee movie music director,
srk atlee movie dropped,
srk upcoming movies 2022,
aamir khan upcoming movies,
salman khan upcoming movies,
srk upcoming movie pathan,
salman khan upcoming movie 2022,
srk upcoming movie shooting,
bollywood upcoming movies,
don 3 release date,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…