பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருவருக்குள் முட்டல் மோதல் துவங்கியுள்ளது. இது தொடருமா அல்லது சமாதானம் ஆகிவிடுவார்களா என்பதை ஆர்வத்துடன் காண காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் துவங்கியுள்ளது. ஜிபிமுத்து ரசிகர்கள், ஜனனி ரசிகர்கள் என சில ஆர்மிக்களுடன் துவங்கியுள்ள இந்த நிகழ்ச்சி, இன்னும் சில ஆர்மிக்களை உருவாக்கும் என்றே தெரிகிறது.
ஓவியா ஆர்மி, லாஸ்லியா ஆர்மி போல இந்த முறை 10 ஆர்மிக்கள் உருவானாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. அந்த அளவுக்கு ஒர்த்தான போட்டியாளர்களை தேர்ந்தெடுத்துள்ளது குழு. இந்நிகழ்ச்சியில் முட்டல் மோதல்கள் தான் சுவாரஸ்யமே. அந்த வகையில், இப்போது ஜனனிக்கும் ஆயிஷாவுக்கும் லைட்டாக முட்டிக்கொண்டிருக்கிறது போல.
இன்றைய புரோமோவில் ஆயிஷா மன வருத்தத்துடன் மன்னிப்பு கேட்பது போல வீடியோ வெளியிட்டுள்ளனர். ஜனனி தனக்கு ஆயிஷாவுடன் மோதல் ஏற்படுவது போல இருக்கிறது என தெரிவிக்கவே, மற்ற போட்டியாளர்களில் சிலரும் இதுபோலவே தெரிவிக்கின்றனர். இதனால் வருத்தப்பட்ட ஆயிஷா மன்னிப்பு கேட்டு கதறி அழுகிறார்.
நேற்று அசல் கோலாறுடன் சின்ன கருத்து வேறுபாட்டில் பிரச்னையாகி அழுதார் ஆயிஷா. பிக்பாஸ் தமிழ் சீசன் 6
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…