தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது காதலியை திருமணம் செய்துவிடலாம் என கோபி கணக்கு போட்டு வருகிறார். ஆனால் இந்த விசயம் கோபியின் குடும்பத்துக்கே தெரியாமல் பார்த்துக் கொண்டதுதான் கோபியின் சாமர்த்தியம்.
முன்னதாக குடித்துவிட்டு பாக்யா தான் தன் மனைவி என குடித்துவிட்டு உளறியதை கேட்ட ராதிகா கோபியை வெறுத்து வருகிறார். அடியோடு வெறுத்துவிட்டு அவரை சந்திக்கவே கூடாது என நினைக்கிறார்.
தனது மனைவி பணத்தாசை பிடித்தவள் அதனால் அவளை வெறுக்கிறேன் என ராதிகாவிடம் பாக்யாவைப் பற்றி கோபி கூறியிருந்தார். இதனால் கோபி பித்தலாட்டம் செய்துள்ளார் என்பதை அறிந்த ராதிகா மிகவும் வருத்தத்தில் இருக்கிறார். தனது மகளான மயூவையும் கோபி அங்கிளை பார்க்கக்கூடாது என கூறிவிட்டார். தன்னைத் தேடி வந்த கோபியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.
இதையெல்லாம் அந்த வழியே வந்த ராதிகாவின் முன்னாள் கணவர் பார்க்க, பின் அவனே உள்ளே வந்து கோபியிடம் சீண்டும் விதமாக பேசுகிறான். நேற்று என்னை வெளியே தள்ளிவிட்டாள் இன்று நீ.. நாளைக்கு யாரோ என தவறாக பேசியதை பொறுக்க முடியாமல் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை எழுகிறது.
இந்நிலையில், ராதிகா கோபியுடன் திருமணம் செய்து வாழும் முடிவை எடுக்கவிருக்கிறார். இதற்கு என்ன காரணம். எப்படி மனது மாறினார் என்பதை தெரிந்துகொள்ள விஜய் தொலைக்காட்சி பாருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…