Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ராதிகாவிடம் சிக்கி அடி மேல் அடி வாங்கும் கோபி.. சுய ரூபத்தை காட்டும் ராதிகா.. இன்றைய எபிசோடு...

Nandhinipriya Ganeshan October 29, 2022 & 14:39 [IST]
ராதிகாவிடம் சிக்கி அடி மேல் அடி வாங்கும் கோபி.. சுய ரூபத்தை காட்டும் ராதிகா.. இன்றைய எபிசோடு...Representative Image.

இன்றைய எபிசோடில் ஜாக்கிங் சென்று எழிலிடம் வம்பிழுத்த கோபி, அசிங்கப்பட்டு வீட்டிற்கு வருகிறான். டையர்டாக வந்ததும் ராதிகா உட்கார்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்கிறார். அப்போது கோபி ராதிகாவை விட்டு விட்டு பார்க்க என்ன கோபி அப்படி பாக்குறீங்க அவ்வளவு அழகா இருக்கனா என்று கேட்க அதெல்லாம் இல்ல ஒரு காபி கிடைக்குமா என்று பயந்து கொண்டே கேட்கிறார். அப்போ நான் அழகா இல்லையா என ராதிகா மடக்கி கேட்கிறார். யார் சொன்னது ரொம்ப அழகா இருக்க என்று கோபி சமாளிக்கிறார். பிறகு மீண்டும் எனக்கு நீ சாப்பாடு கூட போட வேணாம், காலையில மதியம் நைட்டு நான் அடிக்கடி காபி குடிப்பேன் எனக்கு காலையில ஆபீஸ் முடிச்சிட்டு வந்ததும் காபி கொடுத்தா போதும் அதை குடிச்சிட்டு நான் உயிர் வாழ்ந்திடுவேன் என கெஞ்சுகிறார்.

ராதிகாவிடம் சிக்கி அடி மேல் அடி வாங்கும் கோபி.. சுய ரூபத்தை காட்டும் ராதிகா.. இன்றைய எபிசோடு...Representative Image

அதன் பிறகு ராதிகா எதுக்கு இப்படி எல்லாம் கெஞ்சுகிட்டு இருக்கீங்க, ராதிகா காபி வேணும்னு கேட்டா போட்டுக் கொடுக்கப் போறேன் என சொல்லிவிட்டு பேப்பர் படிக்கிறார். பிறகு மீண்டும் கோபி காபி என்று கேட்க, பால் இல்ல போயிட்டு பால் வாங்கிட்டு வாங்க காபி போட்டு தரேன்னு ராதிகா சொல்கிறார். என்னது கடைக்கு நான் போகணுமா என கேட்க ஆமா ஏன் போக மாட்டீங்களா என ராதிகா கேட்க அப்படியெல்லாம் இல்லை என கோபி சமாளிக்க பிறகு ராதிகா பால் வாங்கிட்டு வர அனுப்பி வைக்கிறார்.
 

ராதிகாவிடம் சிக்கி அடி மேல் அடி வாங்கும் கோபி.. சுய ரூபத்தை காட்டும் ராதிகா.. இன்றைய எபிசோடு...Representative Image

இந்தப்பக்கம் பால் வாங்கிட்டு வரும்போது கோபியின் அப்பா கண்ணில் சிக்கிவிடுகிறார். அப்போது அவர் போனில் யாரிடமோ பேசுவது போல கோபியின் நிலைமையை கிண்டல் அடிக்கிறார். வீட்ல இருக்கும் போது கீழ கிடைக்குற துண்டை மேல எடுத்து போட மாட்ட. கேட்ட நேரத்துக்கு காபி கிடைக்கும் இந்த வாழ்க்கை எல்லாம் வேண்டாம் என்று புது வாழ்க்கையை தேடி போன, ஊரைக் கூட்டி கல்யாணம் பண்ண இன்னும் நீ என்ன எல்லாம் படப்போறனு பாக்கத்தானே போறோம் என கைகொட்டி சிரிக்க கோபி கடுப்பாகி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

ராதிகாவிடம் சிக்கி அடி மேல் அடி வாங்கும் கோபி.. சுய ரூபத்தை காட்டும் ராதிகா.. இன்றைய எபிசோடு...Representative Image

வீட்டுக்கு வந்து பார்த்தால் ராதிகா மையூவோடு பிஸியாக இருக்க இன்னைக்கு காபி கிடைச்சா மாதிரி தான் என புலம்ப பிறகு ஸ்கூலுக்கு கிளம்ப கோபி ஆபீசுக்கு கிளம்ப அப்போது ராதிகா காபி கொடுக்க கோபி சந்தோஷமாக காபி குடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது டிபன் என சொல்லி உப்புமாவை எடுத்து வந்து கொடுக்க கோபி ஷாக் ஆகிறார். பிடிக்காத உப்புமாவை மனம் இல்லாமல் கோபி சாப்பிடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்