Baakiyalakshmi Today Episode Tamil: குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் போல கோபிக்கு. அப்படி தான் இன்னைக்கு எபிசோடுல கோபிய வறுத்தெடுக்குறாள் பாக்கியா. வாங்க அது எப்படி இருக்குதுன்னு பார்க்கலாம்.
கடந்த வாரம் இந்த கல்யாணம் நடக்க கூடாதுன்னு ராமமூர்த்தி கல்யாண மண்டபத்துக்கு வந்து பிரச்சனை செய்றாரு. ஆனா பாக்கியா அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு அவர வீட்டுக்கு அனுப்பிடறாங்க. அதுக்கு அப்புறம் கோபி ராதிகாகிட்ட போய் பாத்தியா என்னோட வீட்ல எப்படி இருக்காங்க, என்னெல்லாம் பண்றாங்க. ஆனா நான் உன்னைய விட்டுக்கொடுக்கலன்னு சும்மா நல்லா சோப்பு போடுறார். கவல படாத ராதிகா, என்ன ஆனாலும் கடைசி வரைக்கும் நான் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்னு சொல்றாரு. இதுல அவங்க கொஞ்சம் பூரிச்சு போறாங்க.
அங்க பாக்கியா வரும் போது கோபி வீம்புக்கு வழி மறைச்சு, என்ன ரொம்ப கஷ்டமா இருக்கா. எங்க என்ன பெத்தப்பன், நல்லா பிளான் பண்ணி ட்ராமா பண்றீங்க. நீங்கள் பண்ண பிரச்சனைல உன்னோட ஆர்டர கேன்சல் பண்ண சொன்னாங்க, ஆனா நான் தான் வேணாம் நாளைக்கு நான் தாலி கற்றதை நீ பார்த்து உள்ளுக்குள்ள குமுறி குமுறி அழுவணும்னு சொன்னேன். இப்படி ஐயா தல டயலாக்கா பேசுறாப்ல, ஆனா நமக்கு கூடிய சீக்கிரம் பல்பு கிடைக்க போவுதுன்னு பாவம் தெரில. அப்புறம் நம்ப பாக்கியா சூப்பரான ரிப்ளை கொடுத்தாங்க பாருங்க.
எல்லாம் முடிஞ்சதா நான் கிளம்பலாமான்னு கேட்டுட்டு கிளம்புறாங்க. அப்ப நீ இந்த மாறி எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உனக்குலையே வச்சிக்கிட்டு நல்லவ வேஷம் நல்லா போடுறன்னு சொன்னாரு கோபி. இதுக்கு மேலையும் பொறுக்க முடியாம, நீ யார வேண்ணா கல்யாணம் பண்ணிக்கோங்க எனக்கு எந்த கவலையும் இல்ல. என்னைக்கு 25 வருஷ வாழ்க்கைல என்னோட புருஷன் நல்லவர் இல்லையோ, எனக்கு அப்படி ஒரு துரோகத்தை செஞ்சாரோ அப்பையே எல்லாமே முடிஞ்சு போச்சு. நான் அதுல இருந்து வெளிய வந்து ரொம்ப நாள் ஆச்சு. நானா வந்து உங்ககிட்ட இது அதுனு எதுமே கேக்கல. எப்படி நான் உங்களுக்கு வேண்டாதவளோ ஆகிட்டேனோ, நீங்களும் எனக்கு அப்படி தான். நான் எந்த தப்பும் செய்யல, எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்ல, ஒருவேள உங்களுக்கு அப்படி இருக்கு போல அத்தான் இப்படி கூப்பிட்டு கூப்பிட்டு பேசுறீங்க போலன்னு நச்சுன்னு சொன்னாங்க.
இந்த 25 வருஷ கல்யாண வாழ்க்கைல என்கூட நிம்மதியா இல்லன்னு நிறைய தடவ சொல்லிருக்கீங்க. நீங்க மட்டும் இல்ல நிறைய ஆம்பளைங்க இதை பொண்ணுங்க கிட்ட சொல்லிருப்பீங்க. நாங்க பொழச்சு பூக்கட்டும்னு கண்டுக்காம விட்டுட்டோம். ஆனா உங்களோட வாழறது கஷ்டமா இருக்கு, நிம்மதியாவே இல்லைன்னு நாங்க திரும்ப சொன்னா உங்களால தாங்க முடியாதுன்னு செம்மையா சொல்லிட்டு போய்டுவாங்க. அப்புறம் மொக்க வாங்கிட்டு கோபி தலைய குணிஜிட்டு நிக்கிறாரு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…