Sun ,Apr 14, 2024

சென்செக்ஸ் 74,244.90
-793.25sensex(-1.06%)
நிஃப்டி22,519.40
-234.40sensex(-1.03%)
USD
81.57
Exclusive

பாலாவுடன் சேராத விஜய்! இதுதான் காரணமாம்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 13:24 [IST]
பாலாவுடன் சேராத விஜய்! இதுதான் காரணமாம்...!Representative Image.

தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணி கதைகளை இயக்கி வெற்றி கண்டவர்கள் பலர் உண்டு. மிஷ்கின், வெற்றிமாறன், ராம், லோகேஷ் கனகராஜ் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். இதில் கொஞ்சம் சீனியர் என்றே இவரைச் சொல்லலாம். இயக்குநர் பாலாவின் படங்கள் மிகவும் டார்க்கான கதைக் களமாகவும், மிகவும் எதார்த்தமானதாகவும் இருக்கும். அப்படி சூர்யா, விக்ரம், ஆர்யா, அதர்வா, விஷால் என இவர் படத்தில் நடித்த பிறகு மிகப் பெரிய ஆளாக ஆனவர்களும் இருக்கிறார்கள். 

பாலா படத்தில் அஜித் நடிப்பதாக கூட தகவல் வெளியானது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில், விஜய் ஏன் பாலா படத்தில் நடிக்கவில்லை பலரும் கேட்டு வருகின்றனர். முதல் காரணம் பாலா படத்தில் ஹீரோயிசம் இருக்காது. யதார்த்த மனிதராக நடிக்கும் வகையில் கதாநாயகன் இருப்பார் இது விஜய்க்கு ஒத்து வராது என்பதால் அவரிடம் கதை கேட்கவும் இல்லை அதே நேரம் பாலாவும் இவருக்காக கதை உருவாக்கவில்லையாம். இதனால்தான் இந்த கூட்டணி சேரவில்லை என கூறுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்