Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

புற்றுநோயில் இருந்து தப்பித்து மாரடைப்புக்கு பலியான பிரபல நடிகை.. 

Nandhinipriya Ganeshan November 21, 2022 & 10:17 [IST]
புற்றுநோயில் இருந்து தப்பித்து மாரடைப்புக்கு பலியான பிரபல நடிகை.. Representative Image.

60 வயது ஆனால் தான் மாரடைப்பு வரும் என்ற காலம்  மாறி, தற்போது 30, 40 வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு வரும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிலும், சமீபத்தில் பல முன்னணி  நடிகர்களும் மாரடைப்படைப்பால் உயிரிழந்துவருகிறது. முக்கியமாக, ஜிம்மில் வொர்க்அவுட் செய்து கொண்டிருக்கும்போதே இறக்கிறார். இப்படி இருக்கையில், வெறும் 24 வயதே ஆன வங்காள நடிகை மாரடைப்பு காரணமாக பலியான பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

புற்றுநோயில் இருந்து தப்பித்து மாரடைப்புக்கு பலியான பிரபல நடிகை.. Representative Image

பெங்காலி நடிகையான அயிந்திரில்லா ஷர்மா கடந்த நவம்பர் 14 ஆம் தேதி அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கபட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஞாயிற்றுக்கிழமை (20-11-2022) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் நடிகையின் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் வங்காள சினிமா துறை என ஒட்டுமொத்தமாக அனைவருமே சோகக் கடலில் மூழ்கி உள்ளனர்.

 

புற்றுநோயில் இருந்து தப்பித்து மாரடைப்புக்கு பலியான பிரபல நடிகை.. Representative Image

இளம் வயதியில் இருந்தே புற்றுநோயால் தவித்து வந்த அயிந்திரில்லா ஷர்மா, அதிலிருந்து மீண்டு நடிகையாக திரையில் ஜொலித்து வந்தார். ஆனால், மாரடைப்பு அவரை விட்டு வைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் சமீபத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். என்னதான் நடிகர்களாக இருந்தாலும் தங்களின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது மிகவும் அவசியம். 

Also Read: தியேட்டரில் மிஸ் பண்ணவங்களுக்கு நற்செய்தி.. நாளை வெளியாகிறது சொல் பாடல்....!

Tag: Aindrila Sharma Passes Away | Bengali Actress Aindrila Sharma Death News | பிரபல நடிகை மரணம் | மாரடைப்பால் பிரபல நடிகை மரணம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்