Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

புத்தம் புதிய கதாபாத்திரம் மற்றும் கதையில் பாரதி கண்ணம்மா சீசன் 2.! அந்தப் புது கதை இது தான் | Bharathi Kannamma Season 2 Story

Gowthami Subramani Updated:
புத்தம் புதிய கதாபாத்திரம் மற்றும் கதையில் பாரதி கண்ணம்மா சீசன் 2.! அந்தப் புது கதை இது தான் | Bharathi Kannamma Season 2 StoryRepresentative Image.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பாரதி கண்ணம்மா சீசன் 1 முடிந்த வேளையில், சீசன் 2 –வும் தொடங்கி திங்கள்கிழமை டிசம்பர் 06, 2023 ஆம் நாள் முதல் ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் டிவி-யில் எந்த சீரியலாக இருந்தாலும், பாரதி கண்ணம்மா சீரியலுக்கென ஒரு தனி மௌசு உண்டு. சீசன் 1 முடிந்ததும், சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு பதட்டம் எழுந்தது. ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரும் வகையில் அடுத்த சீசனையும் உடனடியாகத் தொடங்கி புத்தம் புது கதைக் களத்தில் வெளியிட்டுள்ளனர்.

புத்தம் புதிய கதாபாத்திரம் மற்றும் கதையில் பாரதி கண்ணம்மா சீசன் 2.! அந்தப் புது கதை இது தான் | Bharathi Kannamma Season 2 StoryRepresentative Image

பாரதியாக அர்ஜீன் சார்

இந்த சீசன் 2 வில் எந்த கதாபாத்திரங்கள் வரப்போகிறது என எல்லோருக்கும் குழப்பம். ஆனா யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட், சீசன் 1-ல் இறந்து போன கண்ணம்மாவின் அம்மா, சீசன் 2-வில் களமிறங்கியுள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலுக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. அதுவும் சில நாள்களுக்கு முன்னர் முடிந்து விட்டது.  இப்போ ஏன் உடண்டே ரோஜா சீரியலுக்குப் போனோம்னு சந்தேகமா.? ரோஜா சீரியல் ஹீரோ அர்ஜீன் தான் இந்த சீசன் 2 வின் பாரதியாக களமிறங்கியுள்ளார்.

புத்தம் புதிய கதாபாத்திரம் மற்றும் கதையில் பாரதி கண்ணம்மா சீசன் 2.! அந்தப் புது கதை இது தான் | Bharathi Kannamma Season 2 StoryRepresentative Image

பாரதி கண்ணம்மா சீசன் 2 கதை

இப்படி புத்தம் புது கதாபாத்திரங்கள், புதிய கதைக்களம் என செல்லும் பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் கதை என்ன தெரியுமா..? இதன் முதல் எபிசோடிலேயே பெரும்பாலானோர்க்கு கதை புரிந்திருக்கும். சீசன் 1-ல் டாக்டராக இருந்த பாரதி, சீசன் -2 வில் ஊரின் ஒரு முக்கிய நபராக நடித்துள்ளார். இந்த சீசன் 2 வில் இவங்களுக்கு எதிரியா அவங்க அத்தையும், அத்தை மகனும் இருப்பாங்கனு சொல்றாங்க. அதே நேரத்துல, சீசன் 1-ல் வில்லியா இருந்தாலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தையேக் கைக்குள் வைத்திருந்த வெண்பா, சீசன் 2 லயும் வராங்க. ஆனா, அதே வெண்பாவானு தான் சந்தேகமா இருக்கு.

புத்தம் புதிய கதாபாத்திரம் மற்றும் கதையில் பாரதி கண்ணம்மா சீசன் 2.! அந்தப் புது கதை இது தான் | Bharathi Kannamma Season 2 StoryRepresentative Image

பாரதி காதலியே கண்ணம்மா

விஜய் டிவி வெளியிட்ட புரோமோவ பாத்தா, இந்த சீசன் 2 –லயும் பாரதி, கண்ணம்மா ரொமேன்ஸ் தூள் கலப்பிடும். குடிமகனா இருந்த பாரதி குடிகாரனா மாறியிருக்காரு. இந்த சீசன் 2 ல எப்படி பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தரப்போகுதுனு வெயிட் பண்ணி பாக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்