பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமலஹாசனிடம் உளறிக் கொட்டி ஆயிஷா வசமாக மாட்டிக் கொண்டார்.
இந்த வாரம் நடந்த பொம்மை டாஸ்க் மிக ரணகளமாக சென்ற நிலையில், அசீம் செய்த செயல் பிக்பாஸ் ரசிகர்களை கொதிப்படைய வைத்தது. இந்நிலையில், இந்த வார கடைசியில் கமலஹாசன் வந்த பிறகு நிகழ்ச்சி சூடு பிடித்திருக்கிறது.
ரச்சிதாவின் பொம்மையை எடுத்துக் கொண்டு டால் ஹவுஸுக்கு சென்றீர்களா என ஆயிஷாவிடம் கமலஹாசன் கேட்ட ப்ரொமோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்த ஆயிஷா, எனக்கு சத்தியமாக தெரியாது, ரச்சிதா அக்கா பொம்மையை எடுத்துப் போக யாரும் சொல்லவில்லை என்று கூறுகிறார்.
பின்னர், அசீம் அண்ணா தான் எடுத்துப் போகச் சொன்னார் என்று ஆயிஷா உளற, அசீமுடைய திட்டத்தில் நீங்கள் பங்கெடுத்துக் கொண்டீர்களா என கமல் சொன்னதை கேட்டு ஆயிஷா பேயறைந்தது போல் நின்றார். ஆயிஷா போலியாக இருக்கிறார் என்றும் அவரது முகத்திரையை கிழித்த கமலுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் ஃபயர் விட்டு பாராட்டித் தள்ளிவிட்டனர்.
இதையடுத்து அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்து, நம்ம தடவல் மன்னன் அசல் கோலாருடன் சேர்த்து வெளியே அனுப்பி வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவ, அசல் கோலாரை மட்டும் வெளியே அனுப்பிவிட்டு, அசீமை கண்டித்தார் கமல் ஹாசன். அசீமை தனக்கே உரிய பாணியில் கமல் கண்டித்த விதமும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று விட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…