21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் போட்டி இப்போது இறுதி நாளை எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வமாக இன்று கடைசி நாள். இந்த நாளுக்குரிய எபிசோட் நாளை ஒளிபரப்பாகும். இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் விதமாக ஆறாவது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரியவந்துள்ளது. இது பலருக்கு ஆச்சர்யத்தையும் பலருக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் ஒவ்வொரு வாரமும் கண்டென்ட் கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். அப்படி யார் கண்டென்ட் குடுக்கவில்லையோ யார் சரியாக விளையாடாமல் தொய்வை சந்திக்கிறார்களோ அவர்களை அவ்வப்போது வெளியேற்றி போட்டி சமநிலையைப் பேணி பாதுகாப்பது பிக்பாஸின் கடமை.
பிக்பாஸின் சொல்படி நடந்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு போட்டியாளர்கள் நடக்கிறார்களா இல்லையா அப்படி மீறினால் என்ன நடவடிக்கைகள் சொல்லித் திருந்துவார்களா செயல்பட்டு திருந்துவார்களா என ஒரு ஆசானாக அவர்களை திருத்துகிறார் கமல்ஹாசன்.
இப்படி வாரம் ஒருமுறை சனி, ஞாயிறுகளில் வந்து சென்ற கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் நடுநிலையாக நடந்துகொண்டிருக்கிறார் என பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசன் சொல்வதைப் போல, இந்த இறுதிப் போட்டியிலும் எதிர்பாராத ஒன்று நடந்துள்ளது. அதுதான் யாரும் யோசிக்காத டுவிஸ்ட். விக்ரமன் இல்லை அசீம் இந்த நிகழ்ச்சியின் வின்னர் என்கிறார்கள்.
உருவக்கேலி செய்கிறார், எல்லாரையும் வசை பாடுகிறார், சண்டைப்போட்டுக் கொண்டே இருக்கிறார் என பேசப்பட்ட அசீம்தான் வின்னராம். அசீமை பிடிக்காதவர்கள்தான் வெளியில் அதிகம். ஆனால் அவர்தான் கேமை சரியாக ஆடுகிறார் கேமராவுக்காக நடிக்கவில்லை என அவரை விரும்புவோர் வாதிடுகின்றனர். இதனால் அவர்தான் டைட்டிலுக்கு உண்மையாக தகுதியானவர் என வாதிடுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக் கட்டத்தில் அமுதவாணன் 15 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடுகிறார். அதனைத் தொடர்ந்து மைனா நந்தினியும் வெளியேற்றப்படுகிறார். இப்படி இறுதி ஆட்டத்தில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோர் மோதுகிறார்கள். கிட்டத்தட்ட ரிசல்ட் வந்துவிட்டது. யார் வின்னர் என்பதை சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமாகவே தெரிந்துகொள்வோம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…