மொழி, அபியும் நானும் படத்தை இயக்கியிருந்த ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் படமான பொம்மையின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பொம்மை கடையில் வேலை செய்யும் எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு பெண்ணுடன் காதல். அவளுக்காக எதையும் செய்யும் அளவுக்கு வெறித்தனமாக காதலிக்கும் எஸ் ஜே சூர்யா, ஒரு கட்டத்தில் அவர் காதலிக்கும் பெண் யார் என்பது நமக்கு தெரிகிறது. அது ஒரு பொம்மை. அந்த பொம்மைக்காக பல தொடர் கொலைகளை செய்கிறார். இதனை கண்டுபிடிக்க போலீஸ் களமிறங்குகிறது. இப்படித்தான் டிரெய்லரிலிருந்து நாம் கதையை புரிந்துகொள்ள முடிகிறது.
எஸ்ஜே சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது சிறப்பு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…