Fri ,Mar 24, 2023

சென்செக்ஸ் 57,860.03
-65.25sensex(-0.11%)
நிஃப்டி17,040.85
-36.05sensex(-0.21%)
USD
81.57
Exclusive

பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு.. இசைக் கச்சேரியில் பகீர்!!

Sekar Updated:
பிரபல பாடகர் மீது பாட்டில் வீச்சு.. இசைக் கச்சேரியில் பகீர்!!Representative Image.

கர்நாடகாவில் நேற்று நடந்த இசை நிகழ்ச்சியின் போது, பாடகர் கைலாஷ் கெர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்வின் போது பாடகர் மீது பாட்டில் வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி, கெர் மீது பாட்டிலை வீசிய நபரை கைது செய்தனர்.

இது தொடர்பாக வெளியான ஊடக அறிக்கையின்படி, பாடகர் காயமின்றி தப்பினார் மற்றும் இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கும் வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரபலமான பாடகரான கைலாஷ் கெர் தாக்கப்பட்ட தகவல் வைரலாக பரவிய நிலையில், அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படாதது தான் இதற்கு காரணம் என அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்