90ஸ் கிட்ஸ் மட்டுமல்லாமல், 2k கிட்ஸ் என அனைவரும் இன்றும் விரும்பி பார்க்கப்படும் பிரபல சேனல் நிறுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
90ஸ் கிட்ஸ் தொடக்கக் காலத்தில், டிவி, மொபைல் என எதுவும் கிடையாது. குழந்தைகளைச் சமாளிக்க வேண்டும்னா பெரிதும் கஷ்டமாகி விடும். இந்த நவீன காலத்தில் தான் மொபைல், யூடியூப் போன்றவற்றையே குழந்தைகள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், எந்த கிட்ஸாக இருந்தாலும், எந்த வயதிலும் விரும்புவது டிவியில் ஒளிபரப்பாகும் கார்ட்டூன் படங்கள், ஸ்பைடர் மேன், டோரா புஜ்ஜி, உள்ளிட்டவை.
இன்றும் பல பேரின் வீட்டில், இந்த சேனல்கள் இல்லையென்றால் அதிசயம் தான். ஆனால், அதற்கு மாற்றம் கொடுக்கும் வகையில் சமீபத்தில் பிரபல சன் தொலைக்காட்சியின் சேனலான சுட்டி டிவியை நிறுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது கார்ட்டூன் நெட்வொர்க் சேனலையும் நிறுத்துவதாக கூறப்படுகிறது. கார்ட்டூன் நெட்வொர்க் கடந்த 30 ஆண்டுகளாக பெரும்பாலானோர் மனதில் நீங்கா இடம் பிடித்ததாக இருந்த சேனல். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் அனைத்தையுமே விரும்பிப் பார்ப்பவர்களுக்கு இது ஒரு ஏக்கமாக உள்ளது.
இதனால் வருத்தமடைந்து, கார்ட்டூன் நெட்வொர்க் இல்லாத கவலையில், ட்வீட் செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…