பிரபல டிவி சீரியல் நடிகை ஸ்ரீநிதி சமீப காலமாக பல விசயங்களை யூடியூபில் வெளியிட்டு வருகிறார். அது பலருக்கும் பெரிய பிரச்னைகளை உருவாக்கி வருகிறது. அவருக்கு மன நல பிரச்னை இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்பு தன்னை காதலிப்பதாகவும் அவர் வீட்டு முன் நின்று போராட்டம் செய்வதாகவும் வீடியோ வெளியிட்டு அவரது ரசிகர்களிடம் திட்டு வாங்கியிருந்தார்.
வலிமை படத்தை கலாய்த்து அஜித் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இவர் அவ்வப்போது ஒரு வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது போல, இப்போதும் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவர் தான் தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்க ஆடிசன் சென்ற போது ஒரு பெரிய தொலைக்காட்சி நிறுவனத்தின் மேலாளர், இவரை தனியாக ஒரு அறைக்கும் அழைத்து மடியில் உட்கார சொன்னாராம்.
அவர் சொல்வதைக் கேட்காவிட்டால் என்ன செய்வாரோ என பயந்து அவர் மடியில் உக்காந்தாராம். சிறிதுநேரத்தில் அவர் அங்கிருந்து ஓடி வந்துவிட்டாராம். பின்னர் அந்த வாய்ப்பே வேண்டாம் என வந்துவிட்டார் என கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…