அனைவரது வீட்டிலும் சாயங்களாம் ஆகிவிட்டாலே எது இருக்குமோ இல்லையே டிவியில் சீரியல் ஓடிக்கொண்டிருக்கும். தங்களது அற்புதமான நடிப்பால் அனைவரது நெஞ்சங்களிலும் நீங்க இடம் பிடிப்பவர்கள் நம்ம சின்னத்திரை நட்சத்திரங்கள். ஆனால், சீரியலில் வரும் ரீல் ஜோடிகளே ரியல் ஜோடிகளாக மாறுவார்கள் என்று யாரும் எதிர்ப்பார்த்திருக்கமாட்டோம். அந்தவகையில், இந்த ஆண்டு தலை தீபாவளி கொண்டாடும் சின்னத்திரை நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.
ரவீந்தர் - மகாலட்சுமி
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்திற்கு அடுத்து அதிகம் பரபரப்பாக பேசப்பட்ட திருமணம் என்றால் அது இந்த ஜோடிகளின் திருமணம் தான். கடந்த செப்டம்பர் மாதம் திருப்பதியில் ரவீந்தர் - மகாலட்சுமியின் திருமணம் வெகு சிறப்பாக நடந்துமுடிந்தது. தயாரிப்பாளரான ரவீந்தர் மற்றும் சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். தலை கொண்டாடுவதற்காகவே இவ்வளவு அவசரமாக திருமணம் செய்துக்கொண்டதாக மகாலட்சுமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தீபாவளியும் வந்துவிட்டது இதற்காக ஹனிமூன் கூட போகாமல் ஆவலுடன் காத்திருக்கிறது இந்த ஜோடி.
சித்து - ஸ்ரேயா
கலர்ஸ் சேனலில் திருமணம் என்ற சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றவர் சித்து மற்றும் ஸ்ரேயா. இவர்கள் சீரியலின் போதே காதலித்து பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் (22.11.2021) திருமணம் செய்துக்கொண்டனர். ஒரு வருடத்திற்கு பிறகு இப்போது தான் தலை தீபாவளி கொண்டாட உள்ளது இந்த அழகிய ஜோடி. சித்து தற்போது ராஜா ராணி சீரியலில் நாயகனாக நடித்துவருகிறார்.
மதன் - ரேஷ்மா
ஜீ தமிழிலில் 'பூவே பூச்சூடவா' என்ற சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும்போதே காதலித்து வந்த ரேஷ்மாவும், மதனும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் (15.11.2021) திருமணம் செய்துக்கொண்டனர். அந்தவகையில், இவர்களும் இந்த அண்டு தான் தலை தீபாவளி கொண்டாட உள்ளார்கள். தற்போது இந்த ஜோடி கலர்ஸ் சேனலில் அபி டைலர் என்ற சீரியலில் நடித்துவருகின்றனர்.
விஷ்வா ஷாம் - நக்ஷத்ரா
ஜீ தமிழிலில் 'யாரடி நீ மோகினி' என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நக்ஷ்த்ரா. தனது வெளிப்படையான நடிப்பால் மிகவும் பிரபலமானவர். தாத்தாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக குடும்பக் கோயிலில் வைத்து வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் (12.07.2022) நக்ஷ்த்ரா தனது காதலரான விஷ்வாவை கரம்பிடித்தார்.
ஆர்யன் - ஷபானா
'செம்பருத்தி' சீரியலின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷபானா. இவரும் பாக்கிய லட்சுமி சீரியல் நடிகரான ஆர்யனும் சில காலமாக காதலித்து வந்துள்ளனர். பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் (12.11.2021) இருவீட்டார் ஒப்புதலுடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த ஜோடியும் இந்த வருஷம் தான் தலை தீபாவளி கொண்டாட உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…