தமிழ் சினிமாவில் மிக முக்கிய படங்களின் பட்டியலை எடுத்தால், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படமும் அதில் அடங்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த படத்தை பாராட்டாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு கதையும், த்ரில் ஃபேக்டரும், கதாபாத்திரங்களின் நடிப்பும் அசத்தலாக இருந்தது. பி வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது.
ராகவா லாரன்ஸ் டாக்டர் சரவணனின் அதாவது ரஜினிகாந்தின் மாணவராக நடிக்கிறார். அவர்தான் கதையின் நாயகன். லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கும் இந்த படத்தில் இன்னும் பலர் நடிக்கின்றனர்.
ராகவா லாரன்ஸுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவும் நடிக்கிறார். பாகுபலி ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட திரைப்படங்களின் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணிதான் இந்த படத்துக்கும் இசை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…