Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இணையத்தில் கசிந்த சில்லா சில்லா பாடல்...!

UDHAYA KUMAR Updated:
இணையத்தில் கசிந்த சில்லா சில்லா பாடல்...! Representative Image.

Chilla Chilla song lyrics ஃபயரு ஃபியரு டயரு... வேற லெவல்ல இருக்கே பாட்டு...!

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் புதிய படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து,  போனி கபூரின் தயாரிப்பில் அஜித்தின் மூன்றாவது படமாக வெளியாகவுள்ளது.  தளபதி விஜய்யின் வாரிசுக்கு போட்டியாக பொங்கல் தினத்தில் வெளியிடப்படுகிறது துணிவு திரைப்படம். 

முன்னதாக, வாரிசு படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியான நிலையிலும் துணிவு பாடல்கள் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. ஆனால் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அந்த பாடல் குறித்த சில தகவல்களை இசையமைப்பாளர் வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில்,  துணிவு படத்தின் முதல் சிங்கிள் வரும் டிசம்பர் 9ம் தேதி ரிலீசாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே சில நொடிகள் பாடல் இணையத்தில் லீக்கானது ஏமாற்றமளித்துள்ளது. அஜித் ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இது ஜாலியாக இருந்தாலும், இப்படி லீக்கானது படக்குழுவுக்குதான் வருத்தமளிக்கும் செயலாக உள்ளது. 

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி,  அந்த லீக்கான வீடியோ வெளியிட்ட அனைத்து டிவீட்களும் முடக்கப்பட்டுள்ளதாகவும், படக்குழுவே வெளியிடாத விசயத்தை அவசர அவசரமாக ஆர்வக்கோளாறாக வெளியிடுவது முறையல்ல என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்