Sun ,Dec 04, 2022

சென்செக்ஸ் 62,868.50
-415.69(-0.66%)
நிஃப்டி18,696.10
-116.40(-0.62%)
USD
81.57
Exclusive

லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட ஸ்டாலின் மனைவி.. பதிலுக்கு முதல்வர் கொடுத்த அல்டிமேட் ரிப்ளை..

Nandhinipriya Ganeshan November 14, 2022 & 12:46 [IST]
லவ் டுடே படம் பார்த்து போனை மாத்திக்கலாமானு கேட்ட ஸ்டாலின் மனைவி.. பதிலுக்கு முதல்வர் கொடுத்த அல்டிமேட் ரிப்ளை..Representative Image.

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய திரைப்படம் லவ் டுடே. கடந்த வாரம் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. அத்தோடு வசூலையும் வாரிக்குவித்து வருகிறது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார்.

கோமாளி படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் இயக்கிய இரண்டாவது படமும் சூப்பர் ஹிட் தான். மேலும் இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா, அத்தோடு சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தில் பிரதீப்பும், இவானாவும் காதலர்கள். இவர்களின் காதலுக்கு ஓகே சொல்ல இவானாவின் அப்பா சத்யராஜ் ஒரேயொரு கண்டிஷன் போடுகிறார். அதன்படி பிரதீப்பும், இவானாவும் தங்களது செல்போனை ஒரு நாளைக்கு மாற்றிக் கொள்கிறார்கள். அதன்பின்னர் ஏற்படும் சிக்கல்களை சுவாரஸ்யமாகவும், நகைச்சுவை கலந்த விறுவிறுப்புடன் படத்தை இயக்கியுள்ளார் பிரதீப். 

இந்த நிலையில், லவ்டுடே படம் குறித்து விகடன் நிறுவனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ' லவ் டுடே படம் என் அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அம்மாவும் சூப்பராக இருக்கிறது என்று சொன்னார்கள் என்றார்'.

அதன் பின்னர், இந்த மாதிரி எல்லோரும் செல்ஃபோனை மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு நானும் அப்பவும் அய்யய்யோ வேண்டவே வேண்டாம் என்று என்றோம்' என்று சிரித்தப்படியே கூறினார். உதயநிதி பகிர்ந்துள்ள இந்த தகவல் தற்போது மூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Also Read: வெட்க புன்னகை முகத்தில் மின்ன; திருமண கோலத்தில் நடிகை ஹன்சிகா! 

Tag: Cm Stalin Watch Love Today Movie | Durga Stalin Love Today | Durga Stalin Love Today Movie | Love Today Movie Durga Stalin | முதல்வர் வீட்டில் லவ் டுடே படம் .


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்