Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இளைஞர்களிடையே பற்றிக்கொண்ட லவ் டுடே டிரைலர்!!

Sekar October 06, 2022 & 12:29 [IST]
இளைஞர்களிடையே பற்றிக்கொண்ட லவ் டுடே டிரைலர்!!Representative Image.

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடித்து இயக்கியிருக்கும் லவ் டுடே படத்தின் ட்ரெய்லர் இளைஞர்களிடையே செம வைரலாகி வருகிறது

ஜெயம் ரவி கோமாவில் இருந்து வரும் கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு  வெளியான கோமாளி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். 

இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ள படம் லவ் டுடே. பிரதீப் தானே இயக்கி நடித்துள்ளார். மேலும் இதில் பிரதீப்புக்கு ஜோடியாக இவானா நடிக்க, சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

கதைப்படி காதலர்களாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் இவானாவுக்கு இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாக வைத்து லவ் டுடே திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், அதன் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

டிரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், குறிப்பாக காதலர்கள் இருவரும் மொபைல் போனை மாற்றி கொள்ளும் போது ஏற்படும் நிகழ்வுகளை சுவாரஸ்சியமாக கூற முயற்சித்துள்ளது இளைஞர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. 

இதனால் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற ஆவல் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ளது. லவ் டுடே என்ற இதே பெயரில் விஜய், சுவலட்சுமி நடிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்