Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

கையில் குழந்தையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குக் வித் கோமாளி புகழ்..! ரசிகர்கள் ஷாக்...

Editorial Desk Updated:
கையில் குழந்தையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட குக் வித் கோமாளி புகழ்..! ரசிகர்கள் ஷாக்...Representative Image.

குக் வித் கோமாளி புகழ் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்விஜய் டிவியில் ஒளிபரப்பான "Cooku with Comali" என்ற நகைச்சுவை சமையல் போட்டியின் மூலம் மிக பிரபலம் ஆனவர் "புகழ்". 

குக் வித் கோமாளி:

புகழுக்கு சொந்த ஊர் கடலூர். மதுரையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோ  எதிரில், வாட்டர் வாஷ் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் பின்பு  கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார். அப்போது பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் புகழை அங்கு பார்த்துள்ளார். அவரே புகழை ஒரு நடிகனாக அடையாளம் கண்டு உள்ளார். உதயராஜ் புகழை கலக்கப் போவது யாரு சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லி இருக்கிறார்.

புகழுக்கு சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கலக்கப் போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட் அப் போட்டார் . இந்தக் கெட் அப் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்நிகழ்ச்சியில் இவர் அடித்த லூட்டிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவரின் காமெடியை பலரும் ரசித்தனர்.

அதில் கிடைத்த பிரபலம் அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1 மற்றும் சீசன் 2 ல் பங்கேற்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. இது புகழுக்கு மிகச் சரியான தளமாக அமைந்தது.

இதை அடுத்து புகழை தேடி சினிமா வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தனஎன்ன சொல்ல போகிறாய், சபாபதி, வலிமை படத்தில் ஒரு சிறிய ரோல் என வெளியான நிலையில் தற்போது அருண் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி படங்களில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

காதல்:

பென்சியா என்ற பெண்ணை காதலித்ததை ரகசியமாக வைத்து இருந்து இருக்கிறார் புகழ். ஒரு முறை தன் காதலி உடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்து சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினர். 

காதல் திருமணம்:

பென்சியா என்ற பெண்ணை காதலித்து வந்த புகழ், காதலை வீட்டில் சொல்லி சம்மதம் பெற்று இரு வீட்டார் ஆசிர்வாதத்துடன்  கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் தீபனூரில் இருக்கும் பொய்யா மொழி விநாயகர் கோவிலில் அவர்களின் திருமணம் நடந்தது.  

3 மாதத்திற்குள் கையில் குழந்தை:

திருமணமான மூன்று மாதத்திற்குள்ளேயே தந்தையாகி இருக்கிறார் புகழ். ஒரு நாய்க்குட்டியை வாங்கி இருக்கும் புகழ் அதற்கு இகிமுஸ் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தன்னுடைய செல்ல நாய்க்குட்டியுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தெய்வத் திருமகள் படத்தில் வரும் "ஆரிரோ ஆராரிரோ - இது தந்தையின் தாலாட்டு" என்னும் பாடலுடன்  ஓடவிட்டுள்ளார்.

குட் நியூஸ்:

தன்னுடைய வளர்ப்பு பிராணியான செல்ல நாய் குட்டிக்கு தந்தையான புகழுக்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

இகிமுஸ் வந்தது இருக்கட்டும் ஜூனியர் புகழ் எப்பொழுது வருவார் என ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு புகழ்,  விரைவில் குட் நியூஸ் வரும் என பதில் அளித்தார்.

Also Read: தியேட்டரில் மிஸ் பண்ணவங்களுக்கு நற்செய்தி.. நாளை வெளியாகிறது சொல் பாடல்....!

Tag: Vijay Tv Pugazh Wife | Cook With Comali Pugazh Wife | Cook With Comali Pugazh Child | Cook With Comali Fame Pugazh | Vijay Tv | Pugazh | Cooku With Comali | விஜய் டிவி | புகழ் | குக் வித் கோமாளி.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்