குக் வித் கோமாளி சீசன் 3ல், கலந்து கொண்டவர்களில், பிரபலமானவர் ஸ்ருதிகா. இவர் ஏற்கனவே சூர்யா படத்தில் கதாநாயகியாக நடித்தவர். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தவர், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல ரசிகர்களும் கிடைத்தனர். இவரின் அனைத்து எபிசோட்களையும் தவறாமல் பார்த்து வீடியோ எடிட் செய்யும் அளவுக்கு ரசிகர்களைப் பெற்றுள்ளார்.
செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஸ் பட் நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அவர்களும் கலகலவென செயல்படுகிறார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளராக ரக்ஷன் சிறப்பாக கையாண்டுகொண்டிருக்கிறார். 12 குக்குகள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது 7 பேர் மிஞ்சியுள்ளனர்.
கடந்த வாரம்தான் கிரேஸ் கருணாஸ் எலிமினேட் ஆகியிருந்தார். மிஞ்சியிருக்கும் 7 போட்டியாளர்களில் ஸ்ருதிகா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம்தான் பல ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இந்நிலையில், ஸ்ருதிகா தனது கணவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார்.
இந்த வார நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களது உறவினர் அல்லது நண்பர் ஒருவரை தங்களுடன் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் யாரை அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதை இந்த வார எபிசோடில் காண்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…