Sun ,Apr 02, 2023

சென்செக்ஸ் 57,794.75
181.03sensex(0.31%)
நிஃப்டி17,012.25
60.55sensex(0.36%)
USD
81.57
Exclusive

ஆஹா.. தோனியின் முதல் படத்தோட ஹீரோ இவரா?

Nandhinipriya Ganeshan October 26, 2022 & 12:00 [IST]
ஆஹா.. தோனியின் முதல் படத்தோட ஹீரோ இவரா?Representative Image.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனி, தற்போது அவருடைய மனைவி சாக்ஷியுடன் இணைந்து 'தோனி எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட்' என்ற புதிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளது.  

ஆஹா.. தோனியின் முதல் படத்தோட ஹீரோ இவரா?Representative Image

தோனிக்கு தமிழகம் பழக்கப்பட்ட இடம் என்பதால் முதலில் தமிழில் ஒரு படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். தோனியின் மனைவி சாக்ஷி எழுதியுள்ள கதையை தான் முதல் படமாக எடுக்கவுள்ளார். இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஆஹா.. தோனியின் முதல் படத்தோட ஹீரோ இவரா?Representative Image

இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பியார் பிரேமா காதல், இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு, தனுஷு ராசி நேயர்களே, கசர தபர, வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்