Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

வாத்தி விழாவில்... உண்மையை ஓபனாக கூறிய தனுஷ்... !

UDHAYA KUMAR Updated:
வாத்தி விழாவில்... உண்மையை ஓபனாக கூறிய தனுஷ்... !Representative Image.


தான் மன உளைச்சலில் இருந்ததை ஓபனாக கூறி அரங்கத்தை அதிரச் செய்துள்ளார் நடிகர் தனுஷ். 

திருச்சிற்றம்பலம் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான நானே வருவேன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் தனுஷ் மார்க்கெட் நிலைத்து நிற்க ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் வாத்தி படத்தை ரிலீஸ் செய்து வெற்றியைச் சுவைக்க திட்டமிட்டுள்ளார் தனுஷ். 

பிப்ரவரி மாதம் 17ம் தேதி வெளியாகவுள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களைச் சந்தித்தார் தனுஷ். அடிக்கடி இதுபோன்ற விழாக்களில் தனுஷ் தனது ரசிகர்களை சந்தித்து வருவதாலும் இளம் ரசிகர்களுக்கு தனுஷ் அதிக அளவில் பிடித்துள்ளதாலும் தனுஷின் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லூரி தன்னிடம் கதை கூற வந்தது கொரோனா லாக்டவுன் சமயத்தில், அப்போது தான் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன் என தானாகவே பேசியுள்ளார் தனுஷ். இந்த கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக ரிஜக்ட் செய்யவே திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். ஆனால் முழுமையாக கதை கேட்ட பிறகு அவருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதனால் படத்தை பண்ணிவிடலாம் என முடிவெடுத்துவிட்டாராம். 

வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தனது மகன்களையும் அழைத்து வந்தார் தனுஷ்.  ஜிவி பிரகாஷ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மற்ற பல பிரபலங்களும் உடன் இருந்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்