10 படங்கள் இயக்கிவிட்டு, இயக்கத்திற்கு குட்பை சொல்லிவிடுவேன் ” என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக கைதி படத்தின் மாஸ் ஹிட் மூலம் முக்கிய இயக்குநராக உருமாறினார். மூன்றாவது படத்திலேயே விஜய் வைத்து இயக்கும் அளவிற்கு உயர்ந்தார். அடுத்து தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். படம் 500 கோடிக்கு மேல் வசூல் மழை பொழிந்து, இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறினார்.
தற்போது விஜய் வைத்து மறுபடியும் லியோ எனும் படத்தை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் படம் குறித்தும், இயக்கம் குறித்தும் லோகேஷ் கனகராஜ் பேசியது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது 10 படங்கள் மட்டுமே இயக்குவேன். அதன் பிறகு சினிமாவிற்கு குட்பை சொல்லி விடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
அதிக படங்கள் இயக்க வேண்டும். நீண்ட காலம் இந்த இடத்தில் இருக்க வேண்டும் என்ற எந்தத் திட்டமும் இல்லை. நான் தற்போது இந்த யூனிவர்ஸ் முயற்சித்ததற்கு நடிகர்கள், தயாரிப்பாளரகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். காரணம், அது அவ்வளவு எளிதாக நடந்துவிடாது. என்ஓசி வாங்க வேண்டும் என நிறைய குழப்பங்கள் உண்டு.
ஆக இந்த யூனிவர்ஸுக்கு கிடைக்கும் வரவேற்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என நினைக்கிறேன். எல்சியு-வில் 10 படங்கள் இயக்கிவிட்டு அதிலிருந்து வெளியேறிவிடுவேன். லியோ படத்தில் விஜய்யுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் 10 நாட்களில் விஜய் உடனான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மற்ற நடிகர்களுடன் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய்யை மிஸ் செய்வது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
எல்சியு-வுக்கு கீழ் லியோ வருமா? என்பதை அறிய இன்னும் 3 மாதங்கள் காத்திருங்கள் என்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…