திருமணம் ஆன பின்பு பல முயற்சிகளுக்கு பிறகு பார்த்திபனை காவ்யா நேசிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் காவ்யாவின் காதல் கதை தெரிந்த பின்னர் பார்வதி எடுக்கும் முடிவால் பார்த்தி மற்றும் காவ்யாவின் திருமண வாழ்வில் பெரிய பூகம்பம் வர ஆரம்பித்து விட்டது. தன்னுடைய மகனுக்கு ஏற்ற மனைவியாக காவ்யா இருக்க முடியாது என்னும் எண்ணத்தில் காவ்யாவை சித்திரவதை செய்ய ஆரம்பித்து விடுகிறாள் பார்வதி. இதனின் முடிவால் காவ்யா எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை பார்ப்போம்.
பார்திபனுடன் இருக்கும் இறுதி நாட்களில் அவருக்கு பிடித்த மாதிரி இருக்க காவ்யா முயற்சிக்கிறாள். அவர்கள் செலவழிக்கும் அந்த தருணங்கள் மிகவும் அழகாக காட்சியளிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அது மிகவும் சந்தோஷத்தையும், வருத்தத்தையும் கலந்த ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது. இவர்கள் இப்படி தங்களுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பிரியா ஜீவா இருவரின் குழந்தை தனமான நடிப்பு அனைவரையும் ரசிக்க வைக்கிறது. பிரியாவின் தங்கை சக்தி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற போது அங்கு தவறான செயல்கள் நடைபெறுகிறது என்று போலீஸ் ரைடு நடத்துகின்றனர். அதில் பிரியா ஜீவாவை தவறாக நினைத்து கண்டிக்கிறாள்.
பார்த்தியின் பிறந்த நாளன்று அவருக்கு பல சந்தோசங்களை அளிக்கும் காவ்யா இறுதியாக விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து போட சொல்கிறாள். மனம் விட்ட பார்த்தி வேற வழியில்லாமல் அதில் கையெழுத்து போடுகிறான். இதனை பார்த்து பார்வதி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அடுத்த நாள் குடும்பத்தினர் அனைவரும் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர். அங்கு காவ்யா மற்றும் பார்த்தி இருவரும் எங்களுக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்கின்றனர். ஆனால் நீதிபதியோ காரணம் தெரியாமல் விவாகரத்து கொடுக்க முடியாது என்று கூறுகின்றனர். இதனால் தன்னுடைய காதல் பற்றிய உண்மையை காவ்யா அனைவரின் முன்னிலையிலும் சொல்லுவாங்களா என்று பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…