Eeramana Rojave 2 Today Episode: ஓடிப்போனதாக காவ்யா மீது தேவி போட்ட பழியை உடைக்கும் பார்த்திபன். விளையாட்டு தனமும் குழந்தைத்தனமும் மிகுந்த காவ்யா பார்த்திபன் ஜோடி நெருங்கும் தொடரின் விவரங்கள்.
கடந்த எபிசோடுகள் | Vijay TV Latest Promo
நீங்கள் ஜீவா பிரியா ஜோடியின் கதைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்குறீகள் என்றால், உங்களுக்கெல்லாம் ஒரு சோகமான செய்தி. இந்த வாரம் முழுவதும் குழந்தைத்தனம் மிகுந்த காவ்யா, அவளை பாதுகாக்கும் பார்த்திபன் கதை மட்டும் தான் நடந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் காவ்யா மற்றும் பார்த்திபன் ஒன்னு சேர விரும்பும் அவர்களின் குடும்பத்தினர் வீட்டில் ஒரு சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்கின்றனர். காவ்யா படிக்க செல்லும் பொழுது, Cab இல் சென்று கொண்டிருக்கும் பொழுது அவளுடைய போன் கீழே விழுந்துவிடுகிறது. அதனை கவனிக்காமல் அவள் செல்ல, அன்று கிளாஸ் முடிந்த பிறகு சிறிது நேரம் கண் அசருகிறாள். அந்த நேரத்தில் அனைவரும் செல்ல, வாட்ச் மேன் காவ்யா இருப்பதாய் கவனிக்கலாம் கிளாஸை பூட்டி விடுகிறான். நீண்ட நேரம் ஆகியும் காவ்யா வராததால் வீட்டில் அனைவரும் பதறுகின்றனர். தேவி மற்றும் அவளின் கூட்டாளிகள் இந்த பிரச்னையை பெருசாக முயல்கின்றனர்.
இந்த திருமணம் பிடிக்காததால் காவ்யா வீட்டை விட்டு ஓடிவிட்டாள் என்று அபாண்டமாக பழி போடுகிறாள். பார்த்திபன் தேவியிடம் எதிர்த்து பேச, இன்று இரவுக்குள் காவ்யா வரவில்லை என்றால் இந்த வீட்டிற்குள் அவளை அனுமதிக்க மாட்டேன் என்று கூறுகிறாள். பிறகு பார்த்தபின், ஜீவா மற்றும் அவனின் மாமா, அவர்களின் தம்பி என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக தேட ஆரம்பிக்கின்றனர். அருணாச்சலம் மற்றும் துரை போலீஸ் இடம் உதவி கேட்க செல்கின்றனர். பிரியா காவ்யாவின் நண்பர்களிடம் விசாரிக்கிறாள். பார்த்திபன் காவ்யா படிக்கும் இடத்திற்கு சென்று தேடிப்பார்க்கிறான். ஆனால் கிடைக்கவில்லை, அவளுடைய நண்பர்களின் போன் நம்பரை வாங்கி பேசிப்பார்க்கிறான்.
காவ்யா கண் விழித்து பார்க்கும் பொழுது, அவள் மட்டும் தனியாக கிளாஸில் மாட்டிக்கொண்டதை உணருகிறான். கதவைத் தட்டிப்பார்க்கிறாள், கத்திப் பார்க்கிறாள், பேப்பரில் உதவி வேணும் என்று எழுதி தூக்கிபோடுகிறாள். ஆனால் எதுவும் வேளைக்கு ஆகவில்லை, பிறகு மயங்கி விழுகிறாள். இறுதியாக பார்த்திபனுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு மீண்டும் காவ்யா படிக்கும் இடத்திற்கு சென்று பார்க்கிறான். காவ்யா கிளாஸில் மயங்கி விழுந்ததை பார்த்தது பதறி போய், அவளை மீட்கிறான். காவ்யா கண் விழித்ததும் 'சாரி' என்று அழுகிறாள். என்னால உங்க எல்லாத்துக்கும் எவ்ளோ டென்ஷன்ல, வீட்ல எல்லாரும் இன்னேரம் பயந்திருப்பாங்கள என்று அழுகிறாள். அதெல்லாம் ஒன்னும் இல்ல, என்று அவளை சமாதானம் படுத்தி வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.
இன்றைய எபிசோடு | Eeramana Rojave 2 Today Episode
அருணாச்சலம் மற்றும் துரை மனமுடைந்து வீட்டிற்கு வர, தேவி அவர்களை வெறுப்பேற்றுகிறாள். என்ன ஓடிபோய்ட்டாளா, எங்க தேடியும் கிடைக்கலையா? என்று நக்கலாக கேட்கிறாள். நா இன்னைக்கு நைட் வரைக்கும் தான் டைம் கொடுத்திருக்கேன். அதுக்குள்ள அவ வரல நீங்க எல்லாரும் அவளை தலைமுழுகிட வேண்டியது தான் என்று பீதியை கிளப்புகுறாள். வீட்டில் உள்ள அனைவரும் ஷாக் ரியாக்ஷன் கொடுக்க, அனைவர்க்கும் ஒரு கிளோஸ் அப் வைக்கின்றனர். மகா மற்றும் பிரியா அழுதுகொண்டிருக்க, பார்த்திபன் உள்ளே வருகிறான். கூட காவ்யாவை காணவில்லை என்ற மெதப்பில் தேவி ஒரு சிரிப்பு சிரிக்கிறாள் பாருங்க, கோவம் வராதா நபருக்குக் கூட கோவம் வரும் அப்படி ஒரு சிரிப்பு. பார்த்திபன் உடனே காவ்யா உள்ள வா என்று சொன்னதும், அந்த சிரிப்பு அப்படியே கோபம், வெறுப்பு, அவமானம் இப்படி எல்லா ரியாக்ஷனும் சேர்த்து மாறுகிறது தேவிக்கு. அதனை சமாளிக்க என்ன பார்த்திபா ஓடிப்போனவள கைய கால புடிச்சு கெஞ்சி கூட்டிட்டு வந்தியா என்று கேட்க, பார்த்திபன் நான் எதுக்கு அப்படி செய்யணும். காவ்யா என்ன நடந்ததோ அத இங்க எல்லாத்துக்கும் சொல்லு என்றதும், காவ்யா நடந்ததைக் கூறுகிறாள்.
அடுத்த நாள் பார்த்திபன் வேலைக்கு கிளம்பும் பொழுது, காவ்யா கோவிலுக்கு போக வேண்டும் என்று கூறுகிறாள். பார்த்திபன் மைண்டு வாய்ஸ், போன தடவ கூட்டிட்டு போய் விவாகரத்து பாத்திரத்துல கையெழுத்து வாங்குனா, இப்ப கூட்டிட்டு போய் என்ன பண்ண போறான்னு தெரியலையே, ஏதும் வேணாம் பேசாம கெளம்பிடலாம் என்று நினைக்கிறான். காவ்யா சிரித்துக்கொண்டே நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லா தெரியுது. உடனே பார்த்திபன் என்ன, அதெல்லாம் ஒன்னும் இல்ல என்கிறான். இல்ல, போன தடவ இதே மாறி கூட்டிட்டு போய் கையெழுத்து வாங்குனா இப்ப என்ன பண்ணுவாளோன்னு தானே நினைக்கிறீங்க என்கிறாள். ச்ச ச்ச அதெல்ல ஒன்னும் இல்லையே என்று சொல்ல, காவ்யா அதெல்லாம் ஏதும் செய்யமாட்டேன் பயப்படாம வாங்க என்று ஒன்றாக செல்கின்றனர். போகும் வழியில் காவ்யா பார்த்திபனுக்கு தேங்க்ஸ் சொல்கிறாள், எதுக்கு என்று பார்த்திபன் கேட்டதும் இல்ல நேத்து என்னைய விட்டுக்கொடுக்கமா பேசுனீங்கள அதுக்கு என்கிறாள். அதுக்குலாம் எதுக்கு தேங்க்ஸ், பொண்டாட்டிய எப்படி மத்தவங்ககிட்ட விட்டுக்கொடுக்குறது என்று பார்த்திபன் சொன்னதும் காவ்யா மொறைக்கிறாள். காவ்யா குழந்தை தனமாக சண்டைப் போட்டுகொண்டு சிறிது நேரம் பேசாமல் இருந்தால். என்ன யோசிச்சிட்டு வர என்று பார்த்திபன் கேட்க, இல்ல கல்யாண ஆல்பத்தை யார் எரிச்சிருப்பான்னு யோசிக்கிறேன் ஏந்துகிறாள். வீட்ல இருக்குறவங்க யாரவது தான் எரிச்சிருப்பாங்க. எனக்கு ரெண்டு பேத்து மேல டவுட், ஒன்னு ரம்யா, இன்னொன்னு மஞ்சுளா என்கிறாள். அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை, அவங்க இதையெல்லாம் செய்ய மாட்டாங்க என்கிறான் பார்த்திபன். சரி இப்ப இல்லைனாலும் என்னைக்காவது ஒரு நாள் உண்மை வெளிய வரும்ல அப்ப நீங்க அவங்க யாரையும் சும்மா விடக்கூடாது என்கிறாள். ச்ச நான் ஏன் சும்மா விடப்போறேன், அதெல்லாம் விட மாட்டேன் என்றால் பார்த்தி. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து சாமி கும்பிடுறாங்க, பூசாரி வந்து என்ன குழந்தை வேணும்னு வேண்டிக்கிறீங்களா என்றது பார்த்திபன் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு, காவ்யா முகத்தில் அப்படி ஒரு கடுப்பு. உங்கள வந்து கவனிச்சிக்கிறேன், இங்கயே நில்லுங்க நான் பிரகாரத்தை சுத்திட்டு வரேன் என்று செல்கிறாள்.
அந்த கேப்ல பார்த்தி வெளிய போய், பூக்கார அக்காகிட்ட இன்னும் கொஞ்ச நேரத்துல என்னுடைய பொண்டாட்டி வெளிய வருவா, அப்ப நீங்க கரெக்ட்டா மா பூ வாங்கிக்கோ மான்னு சொல்லுங்க என்று பிளான் பண்றான். அதே போல் காவ்யா வந்ததும் அப்படி நடக்க, பார்த்தி அவளுக்கு கை நிறைய பூ வாங்கி தர, காவ்யா அதை கோவிலுக்குள் சென்று சாமிக்கு கொடுத்து விடுகிறாள். பார்த்திபன் முகம் அப்படியே வாடி போகிறது. இதுதான் இன்றைய எபிசோடு முடிந்துவிடுகிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள எங்களின் சமூக வலைதளப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Eeramana rojave 2 serial, eeramana rojave 2 today episode, eeramana rojave 2 episodes, vijay tv latest promo,
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…