Sun ,Dec 03, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

ஈரமான ரோஜாவே 2 சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Eeramana Rojave 2 Serial

Gowthami Subramani Updated:
ஈரமான ரோஜாவே 2 சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Vijay TV Eeramana Rojave 2 SerialRepresentative Image.

விஜய் தொலைக்காட்சியில் ஜனவரி 17, 2022 ஆம் ஆண்டு முதல் ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் முதல் பாகமானது கடந்த 2018 ஜூலை 09 ஆம் நாள் முதல் 2021 ஆகஸ்ட் 14 ஆம் வரை திரையிடப்பட்டது. இதன் அடுத்த பாகமாகவே, ஈரமான ரோஜாவே 5 ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு ஒளிபரப்பானது. ஆனால், பாகம் 1-ன் தொடர்ச்சியாக பாகம் 2 இல்லை.

அண்ணன், தம்பி இருவரும், அக்கா, தங்கை இருவரையும் திருமணம் முடித்த பிறகு, இந்த நால்வருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனைகளையும், அந்தப் பிரச்சனையைக் கடந்து, அவர்கள் போராடும் விதத்தையும் எடுத்துக் கூறும் விதமாகவே இந்த சீரியல் அமைகிறது. இந்தப் பதிவில், ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர்கள், நடிகைகள், கதை, இன்றைய எபிசோட், ப்ரோமோ இன்று உள்ளிட்டவற்றைப் பார்க்கலாம்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் விவரங்கள்

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

ஈரமான ரோஜாவே 2

வகை

நாடகம்

சேனல்

விஜய் டிவி

வெளியீடு

17 ஜனவரி 2022 -
தற்போது

இயங்கும் நேரம்

23-24 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்

7:30 PM- 8:00 PM

இயக்கம்

தாய் செல்வம்

மனோஜ் குமார்

தீம் மியூசிக் இசையமைப்பாளர்

இளையவன்

தயாரிப்பாளர்கள்

ராஜ வேலு

தயாரிப்பு நிறுவனங்கள்

A Telefactory

நெட்வொர்க்

ஸ்டார் விஜய்

 

ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

ஜி.ஆர். திரவியம் ராஜகுமரன்

ஜீவா

சித்தார்த் குமரன்

பார்த்திபன்

கேப்ரியல்லா சார்ல்டன்

காவ்யா

ஸ்வாதி கொண்டே

பிரியா

தீபக் குமார்

அர்ஜூன்

ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த்

சக்தி

ஆர்த்தி ராம்குமார்

தேவி

சாந்தினி பிரகாசன்

ரம்யா

கிரு பாஜி

மஹாலட்சுமி

மீனா வேமுரி

பார்வதி

தசரதி

அருணாச்சலம்

 

விஜய் டிவி சீரியல் ஈரமான ரோஜாவே 2 கதை

ஈரமான ரோஜாவே சீசன் 2-வில், இரு நண்பர்கள் உறவாக மாற வேண்டுமென அவர்களின் மகன், மற்றும் மகளுக்குத் திருமணம் நடத்துவதாகத் திட்டமிட்டுள்ளனர். கதைப்படி, பாத்திபனுக்கும், பிரியாவுக்கும் திருமணம் நடக்க இருந்தது. அதே நேரத்தில், ஜீவா மற்றும் காவ்யா இருவரும் காதலிக்கின்றனர். ஆனால், எதிர்பாராத விதமாக, பார்த்திபன் மற்றும் காவ்யாவிற்கும், ஜீவா மற்றும் பிரியாவிற்கும் திருமணம் நடந்தது.

பின்னர், காவ்யா தனது மனதை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்கிறாள். பின்னர், பார்த்திபன் மற்றும் காவ்யா இருவரும் திருமணத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கின்றனர். இதனிடையில், பிரியாவும், ஜீவாவும் இணைகின்றனர். இந்த மகிழ்ச்சியான சூழலில், சிலரின் சதியினால் ஜீவா, காவ்யா காதல் பற்றி, பார்த்திக்கும், பிரியாவிற்கும் தெரிய வர, இந்த நால்வரும் எந்தெந்த பிரச்சனைகளைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதே மீதி கதையாக உள்ளது.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் இன்றைய எபிசோட்

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, விஜய் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

ஈரமான ரோஜாவே 2 சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்