Sun ,May 28, 2023

சென்செக்ஸ் 61,291.57
-140.17sensex(-0.23%)
நிஃப்டி18,070.15
-59.80sensex(-0.33%)
USD
81.57
Exclusive

பிரபல நடிகரின் மகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. | Emmad Irfani Son Death

Nandhinipriya Ganeshan Updated:
பிரபல நடிகரின் மகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. | Emmad Irfani Son DeathRepresentative Image.

பிரபல பாகிஸ்தான் நடிகரும் மாடலுமான எம்மத் இர்பானின் அன்பு மகனான ஜாவியார் இர்பானியின் இறப்பு செய்தி பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நெஞ்சை பதற வைக்கும் செய்தியை எம்மத்தின் நெருங்கிய நண்பரான ஷான்சாய் ஷேக் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பகிர்ந்து எம்மத் இர்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

எம்மத் இர்பானி ஒரு பிரபலமான நடிகரும் மாடலும் ஆவார், அவர் பல்வேறு தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அவர் சிலா , சீக் மற்றும் ஜாலான் போன்ற பல வெற்றி நாடகத் தொடர்களில் நடித்துள்ளார். 2010 இல் மரியம் ஷஃபாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் எம்மத் இர்பானி. இந்த அழகிய தம்பதிக்கு ஜாவியார் இர்பானி மற்றும் எலனூர் இர்பானி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் ஜாவியார் தான் தற்போது காலமானது.

இருப்பினும், ஜாவியாரின் இந்த திடீர் மரணத்திற்கான காரணம் குறித்த செய்திகள் எதுவும் வெளியாகவில்லை. ஒரு குழந்தையின் இழப்பு ஒரு குடும்பத்திற்கு தாங்கிக்கொள்ள முடியாத வலி என்று நமக்கு தெரியும். இந்த நிலையில், எம்மத் மகனின் மரணம் குறித்த செய்தி பரவியதும், ரசிகர்கள் பல்வேறு சமூக ஊடக தளங்களில் அவரது குடும்பத்திற்கு தங்கள் இரங்கலையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்