Tue ,Jun 06, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

'என்னவோ என்னவோ' பாடல் வரிகள் - பிரியமானவளே! | Ennavo Ennavo Song Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
'என்னவோ என்னவோ' பாடல் வரிகள் - பிரியமானவளே! | Ennavo Ennavo Song Lyrics in TamilRepresentative Image.

கே. செல்வ பாரதி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் 'பிரியமானவளே'. சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், விவேக், ராதிகா சவுதாரி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படமாகவும் மாறியுள்ளது. வசூலிலும் பட்டைய கிளப்பிய பிரியமானவளே படத்தில் வரும் பாடல்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் பலரது ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. அப்படி ஹிட் அடித்த பாடலில் ஒன்று தான் 'என்னவோ என்னவோ' பாடல். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் ஹரிஹரன், மகாலட்சுமி ஐயர் குரலில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இப்பாடலின் வரிகள் இதோ! 

பெண்: ஹோ கோ ஹோ
கோ ஹோ ஓ ஹோ கோ
ஹோ கோ ஹோ ஓ

பெண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை 
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை..
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா – ப்ரியமானவனே

பெண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

பெண்: ஹோ ஹோ ஹோ
ஹோஹோ ஹோ ஹோ
ஹோ ஹோஹோ

ஆண்: மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா

பெண்: குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா

ஆண்: விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா

பெண்: நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா

ஆண்: விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா

பெண்: இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா

ஆண்: நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா

பெண்: என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா

ஆண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை

பெண்: ஹோ கோ ஹோ
கோ ஹோ ஓ ஹோ கோ
ஹோ கோ ஹோ ஓ

ஆண்: இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா

பெண்: இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா

ஆண்: கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா

பெண்: கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா

ஆண்: ஹோ ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா

பெண்: பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா

ஆண்: பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா

பெண்: பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

ஆண்: என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்

பெண்: என்னோடு நீயாக உன்னோடு நானாகவா

ஆண்: ப்ரியமானவளே....

பெண்: ப்ரியமானவனே....

ஆண்: ப்ரியமானவளே....

பெண்: ப்ரியமானவனே....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்