வாழ்க்கையில் வெற்றிப்பாதையில் செல்ல முயற்சிக்கும் ஜனனி… குந்தவையுடன் சக்திக்கு நடக்கும் திருமண ஏற்பாடு. இரண்டும் நடக்குமா..? சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்ப்போம்.
ஜனனி தனது கெரியர நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில், அப்பத்தா அவரைத் தனியே கூட்டிச் சென்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்பத்தாவின் வாழ்க்கையில் இது வரை நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பெண்களைத் தனது அடிமையாக நடத்தும் ஆண்கள் வாழும் இந்த சமூகத்தில் மாற்றங்கள் நிகழுமா? என்றவாறெல்லாம் கேள்விகள் எழுப்பி ஜனனியிடம் பதில் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி இருக்கும் போது, மறுபுறம் குணசீலன், அமைதியாக ஒரு பக்கம் அவரது ஆட்டத்தை ஆட ஆரம்பித்து விட்டார். சக்திக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடத்த இருந்ததாக பேச்சு ஆரம்பித்த உடனே, குந்தவை என்ற பெண்ணுடன் திருமணம் நடத்த திட்டமிட்டு விட்டார். குந்தவையை வீட்டில் தங்க வைத்து, பின்னர் அனுப்பி விட்டார்.
பிறகு, சக்தியுடன் குடும்பத்தோடு கோவிலுக்குச் செல்வதாக கூறினார். ஆனால், அதற்கான முக்கிய காரணத்தை யாரிடமுமே கூறாமல் சர்ப்ரைஸாக வைத்திருந்தார். கோவிலுக்குச் சென்ற பிறகு, அங்கு எல்லோரிடமும் இருந்து செல்போனை வாங்கி ஒரு பேக்கிற்குள் போட்டுக் கொண்டார். பின் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். உடன் வந்த ஒருவருக்குக் கூட அவர் என்ன பிளேன் வைத்துள்ளார் என்று தெரியவில்லை.
அப்போது தான், எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி காத்திட்டு இருந்தது. கோவிலுக்கு குந்தவை மணப்பெண் கோளத்தில் வந்திருக்கிறார். அப்போது தான் குணசீலம் எல்லா உண்மையையும் சொல்கிறார். சக்திக்கும், குந்தவைக்கும் இப்போதே கல்யாணம் நடத்த போவதாகத் தெரிவித்து சக்தியிடம் புதிய துணி கொடுத்து அதை அணிந்து வரச் சொல்கிறார். இதனைக் கண்ட எல்லோருக்கும் ஷாக் தாங்கவில்லை. குந்தவை குணசீலனை அப்பாவைப் போலப் பார்க்கிறாள். இப்படி ஒரு துரோகம் குந்தவைக்குத் தெரிய வந்தால் என்ன நடக்கும்?
இதில் இன்னைக்கு வெளியிட்ட புரோமோவில், சக்தியின் அண்ணிகள் எல்லோரும், சக்திக்கு அட்வைஸ் செய்கிறார்கள். நீ செய்யும் இந்த காரியம் இரண்டு பெண்களோட வாழ்க்கையை பாதிக்கும். உன்னோட வாழ்க்கைய நீ தான் முடிவு எடுக்கணும். இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லு என்று சக்தி கிட்ட சொல்றாங்க. இதுக்கு அப்றம், சக்தியும் ஜனனியும் சேர்ந்து வாழ்வாங்களா..? இல்ல சக்தி குந்தவைய கல்யாணம் பண்ணிப்பாரா? என்ற கேள்விகளுக்கு விடை தெரிஞ்சிக்க நமது searcharoundweb தளத்துடன் இணைந்திருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…