Thu ,Mar 23, 2023

சென்செக்ஸ் 57,875.31
246.36sensex(0.43%)
நிஃப்டி17,050.55
62.15sensex(0.37%)
USD
81.57
Exclusive

விஜய் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ... என்ன நடந்தது..?

UDHAYA KUMAR Updated:
விஜய் பட வாய்ப்பை நிராகரித்த பிரபல ஹீரோ... என்ன நடந்தது..?Representative Image.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.  வசூலில் இவர்தான் டாப் என்பதால் வசூல் சக்ரவர்த்தி என்றே சொல்லலாம். கமல்ஹாசன், ரஜினிகாந்தையே ஓவர் டேக் செய்யும் அளவுக்கு இவரது பிசினஸ் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவைத் தொட்டு தொடர்ந்து வருகிறது. 

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்துக்கு செல்கிறார். அந்த படத்தில் மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உள்ளே கொண்டு வர திட்டமிட்டுள்ளார் லோகேஷ். 

தளபதி 67 படத்தில் 4 வில்லன்கள், அதில் கமல்ஹாசன், லாரன்ஸ், விஷால், மிஷ்கின் என பல பெயர்கள் அடிபடுகிறது. மேலும் த்ரிஷாதான் விஜய் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க மறுத்துள்ளார் பிரபல கதாநாயகன் ஒருவர். 

நவரச நாயகன் கார்த்திக் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. அதற்கு தனிப்பட்ட சில காரணங்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உடல்நலம் சார்ந்த காரணம்தான் என்றாலும் இப்படி ஒரு வாய்ப்பை விட்டுவிட்டாரே என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்